ரஜினி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த படத்தை மீண்டும் இயக்க எனக்கு ஆசை – இயக்குனர் லோகேஷ்.

rajini-and-lokesh
rajini-and-lokesh

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி மாஸ்டர் படங்களை தொடர்ந்து அண்மையில் உலக நாயகன் கமலஹாசனை வைத்து ஒரு மாபெரும் விக்ரம் என்னும் ஆக்சன் திரைப்படத்தை கொடுத்துள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தற்போது சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வெறும் ஐந்து நாட்களில் மட்டுமே விக்ரம் திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்து புதிய சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கண்டு வருவதால் நிச்சயம் விக்ரம் திரைப்படம் 500 கோடி கிளப்பில் இணையும் என்பதே சினிமா பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை கூறி வருகின்றனர்.

விக்ரம் படத்தை தொடர்ந்து அதன் அடுத்த பாகத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர் வெகு விரைவிலேயே அதற்கான அஸ்திவாரம் போடப்படும் என கமலும் கூறி உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அப்படி ஒன்று தான் நீங்கள் ரஜினியின் எந்த படத்தை இயக்க ஆசை படுகிறீர்கள் என கேட்டுள்ளனர் அதற்கு நான் ரஜினியின் தளபதி படத்தை மீண்டும் இயக்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

தளபதி படத்தில் ரஜினி, மம்முட்டி, அரவிந்த்சாமி, ஷபானா என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே சிறப்பாக நடித்து அசத்தி இருக்கும் அப்பொழுது படம் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது அதேபோல அந்த படத்தை இப்பொழுது இயக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தால் நிச்சயம் சிறப்பாக எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.