அந்த தமிழ் நடிகரை வைத்து படம் பண்ண வேண்டும் – எஸ். எஸ். ராஜமௌலி பேட்டி.!

rajamouli
rajamouli

பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்களை இயக்கும் இயக்குனர்கள் விரல்விட்டு என்னும் அளவில் தான் இருக்கின்றனர். அந்த வகையில் ஷங்கரை தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல படங்களை எடுத்தவர் எஸ் எஸ் ராஜமௌலி. இவர் இதுவரை இயக்கிய பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பாகுபலி, பாகுபலி 2, RRR ஆகிய படங்கள் அடங்கும். இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ராஜமௌலி மகேஷ் பாபு உடன் ஒரு படம் பண்ண போகிறார் என்ற தகவலும் வெளியாகிய வண்ணமே வருகிறது. அதுவும் மகேஷ் பாபு ராஜமவுலி இணையும் திரைப்படம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த முன்னணி நடிகர்களை வைத்தும் படங்கள் பண்ண ராஜமௌலி திட்டம் போட்டு இருக்கிறாராம். இப்படி இருக்கின்ற நிலையில் ராஜ மௌலி அயன் முகர்ஜி இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூர், ஆலியா பட், அமிதாபச்சன், நாகர்ஜுனா  ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரம் படம் வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி வெளியாக உள்ள நிலையில் பட குழுவினர்

சென்னை சத்தியம் திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்பொழுது ராஜமௌலி இவர்களுடன் கலந்து கொண்டார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராஜமௌலி ரஜினிகாந்த் பற்றியும் பேசிய உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் படம் பண்ண எல்லா இயக்குனர்களுக்கும் விருப்பம் தான் அதேபோல எனக்கும் அவருடன் படம் பண்ண ரொம்ப ஆசைதான் என கூறினார்.

அதற்கான நேரம் காலம் அமைய வேண்டும் பின் சொல்ல வேண்டிய கதைகள் என்னிடம் இருக்கிறது என்றார் இதை அறிந்த தமிழ்நாடு ரசிகர்கள் தற்பொழுது இந்த செய்தியை வேற லெவலில் பரப்பி வருகின்றனர். மேலும் ரஜினியும் நீங்களும் இணைந்து சீக்கிரம் ஒரு படம் பண்ண வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.