இயக்குனர் வெங்கட்பிரபு அண்மைகாலமாக சிறப்பான படங்களை இயக்கி அசத்தி வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் முதலில் நடிக்க வந்திருந்தாலும் பின் இயக்குனர் அவதாரம் எடுத்து தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தார். சென்னை 600028 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அதனைத் தொடர்ந்து மங்காத்தா இப்பொழுது மாநாடு போன்ற படங்களும் சூப்பர் ஹிட் அடித்தன. மாநாடு திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் நாக சைதன்யா வைத்து இந்த படத்தை ரீமேக் செய்ய உள்ளார் அதற்கான வேலைகளில் வெங்கட்பிரபு இறங்கி உள்ளாராம்.
இப்படி இருக்கின்ற நிலையில் தனியார் பேட்டி ஒன்றில் அஜித் குறித்து ஒரு சில விஷயங்களை கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது நான் அஜித்தின் 50வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றேன் ஆனால் இதை அறிந்த நெட்டிசன்கள் பலரும் அஜித் ஏன் வெங்கட்பிரபு தனது 50வது படத்தை கொடுத்தார்.
இதற்கு அவர் நடிக்காமல் பைக் ரேஸ் அல்லது கார் ரேஸ் ஓட்ட போகலாம் என பல்வேறு விதமான கருத்துக்களை எடுத்து வீசினார். அஜித்தை வைத்து நான் படம் எடுப்பது பலருக்கும் பிடிக்கவில்லை எனவும் கூறினார். தொடர்ந்து நெட்டிசன்கள் இவ்வாறு பல்வேறு கருத்துக்களை கொடுத்தது எனக்கு உத்வேகமாக இருந்தது நான் அஜித்தின் ஐம்பதாவது படத்தை மிக சிறப்பான முறையில் கொடுத்து.
அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என நினைத்தேன் அதுபோல சிறப்பாக செயல்பட்டு அஜித்தின் ஐம்பதாவது படத்தில் அஜித்துக்காக பார்த்து பார்த்து சில காட்சிகளை வடிவமைத்தேன் அதை ரசிகர்களும் பார்த்து கொண்டாடினர் படமும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இருப்பினும் நெட்டிசன்கள் அவ்வாறு கமெண்டுகளை கொடுத்தது சற்று வருத்தமடைய செய்ததாகவும் தெரிவித்தார்.