அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் வருடத்திற்கு ஒரு தரமான படத்தை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்தவகையில் கடைசியாக நெல்சன் கூட்டணியில் உருவான பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது தனது 61 வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்த வருகிறார்.
இந்த படத்தில் முதல் முறையாக இயக்குனர் வம்சி உடன் கைகோர்த்து விஜய் நடித்து வருகிறார் மேலும் இந்த படத்தை தில் ராஜு தயாரித்து வருகின்றனர். இந்த படத்தை அடுத்த ஆண்டு முதலிலே வெளியிட உள்ளதால் படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் செட் அமைக்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகின்றன.
படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், சரத்குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா முதல்முறையாக விஜய் உடன் கை கோர்த்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவின் முன்னாடி நடிகையாவார் இவர் விஜயின் தீவிர ரசிகை அதனால் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சியில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் ராஷ்மிகா மந்தனாவை போல ராசி கண்ணா என்னும் பிரபல நடிகையும் விஜய்யுடன் நடிக்க மிகவும் ஆசையாக இருந்து வருகிறார்.
விஜய்யுடன் நடிப்பது என்னுடைய கனவு எனவும் அவர் பேசியுள்ளார் இந்த செய்தி தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது அடுத்தடுத்து விஜய் நடிக்கும் படங்களில் இவருக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும் எனவும் பலரும் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.