கமலுடன் ஒரு நாள் ஃபுல்லா இருக்கணும்.? இளம் நடிகை ஆசை.! ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த செய்தி

kamal-

உலகநாயகன் கமலஹாசன் திரை உலகில் 220க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இப்பொழுது கூட வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு நடித்த விக்ரம் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 400 கோடிக்கு மேல் அள்ளி வெற்றி கண்டது.

அதனைத் தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் கைகோர்த்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதை முடித்துவிட்டு லோகேஷ் உடன் ஒரு படம், மணிரத்தினத்துடன் ஒரு படம், ஹச். வினோத் உடன் ஒரு படம் பண்ண இருக்கிறார் இதனால் அடுத்த முன்று வருடத்திற்கு நடிகர் கமல் பிஸியான ஹீரோவாக பார்க்கப்படுகிறார்.

இப்படி திரை உலகில் வெற்றியை மட்டுமே கண்டு வரும் கமலஹாசன் அவ்வபொழுது கிசுகிசுவில் சிக்கி விடுகிறார். அதன்படி கௌதமி, பூஜா குமார், அபிராமி, சிம்ரன், ஆண்ட்ரியா போன்றவர்களுடன் இவர் பெரிய அளவில் கிசுகிசுக்கப்படுகிறார் ஆனால் அதற்கெல்லாம் பதில் அளிக்காமல் கமல் திரை உலகில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் வளர்ந்து வரும் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன். நடிகர் கமலஹாசன் பற்றி பேசியுள்ளார்.  இவர் இதுவரை கோப்ரா கென்னடி கிளப் போன்ற படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் கமல் பற்றி சொன்னது என்னவென்றால் எனக்கு நடிகர் கமலஹாசனை ரொம்ப பிடிக்கும்.. அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருக்கிறது..

அதோடு மட்டுமல்லாமல் கமலுடன் ஒரு நாள் உதவி இயக்குனராக இருக்க வேண்டும் அவர் படத்திற்காக என்னெல்லாம் செய்கிறார் என அருகில் இருந்து பார்க்க வேண்டும் என தனது ஆசையை நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் கூறி இருக்கிறார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.

meenachi govindarajan
meenachi govindarajan