தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் முதன்முதலாக சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அறிமுகமான முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.
அந்த வகையில் தொடர்ந்து குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த நடிகை நயன்தாரா பின்னர் கிளாமர்க்கும் கொஞ்சம் வழி விட தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரவும் ஆரம்பித்துவிட்டார்.
இந்நிலையில் தற்போது பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் முதல் சாய்ஸாக இருப்பது நடிகை நயன்தாரா தான் ஆனால் நயன்தாரா தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடிக்கவே அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறாராம்.
இந்நிலையில் சமீபத்தில் தனது ஆசைக் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்து இருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் அடுத்ததாக இவர் நடிப்பில் o2 என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் தன்னுடைய பெயர் லேடி சூப்பர் ஸ்டார் என போடவேண்டும் என நயன்தாரா கூறியதன் காரணமாக இந்த திரைப் படத்தின் தயாரிப்பாளரிடம் விக்னேஷ் சிவன் பெயரை அப்படியே போட்டு விடுங்கள் என கூறி உள்ளார்.
ஆனால் பட குழுவினர்கள் இன்றுவரை அதற்கு சம்மதிக்கவே இல்லையாம். இவ்வாறு தொல்லை கொடுத்து வருவதாள் தயாரிப்பு தரப்பில் பெரும் எரிச்சலை ஊட்டி உள்ளதாக தெரியவந்துள்ளது.