சத்தியமா சொல்றேன் என்னால அது முடியவே முடியாது ஆனா தளபதி விஜய் மட்டும் எப்படி..? தளபதி பற்றி துல்கர் சல்மான் வெளிபடைய பேச்சு..!

dhulkar-sharma
dhulkar-sharma

தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் துல்கர் சல்மான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இவர் சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேட்டி ஒன்றில் மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். இவ்வாறு அந்தப் பேட்டியில் தன்னை பற்றி பேசியது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜயை பற்றியும் பேசி உள்ளார்.

அப்போது அவர் கூறியது என்னவென்றால் நான் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை பார்த்தேன் இவ்வாறு உருவான இத்திரைப்படம் மிகவும் சிறப்பாக இருந்தது மட்டுமில்லாமல் இத்திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது என கூறி உள்ளார்.

அந்தவகையில் வாத்தி கம்மிங் என்ற பாடலில் ஒரு பெரிய ஷாட் இருக்கிறது அந்த வகையில் இந்த சாட்டில் தளபதி விஜய் நடனமாடும் போது மிகவும் சாதாரணமாக நலம் ஆடியுள்ளார் இவ்வாறு அந்த வீடியோவை பார்த்து நான் மிகவும் வியந்து போய் விட்டேன்.

ஏனெனில் எனக்கு நடனம் என்பது மிகவும் கஷ்டமான ஒரு செயலாகும் அந்தவகையில் படப்பிடிப்பின்போது நான் நடனம் ஆடினால் பல முறை டேக் எடுக்க வேண்டி இருக்கும் தல தளபதி விஜய் மிகவும் ஈஸியாக மட்டுமின்றி எளிதாகவும் நடனம் ஆடி வருகிறார். அந்த வகையில் இவருடைய நடனத்தைப் பார்த்து நான் மிகவும் வியந்து போய் விட்டேன்.