நடிகை சரண்யா பொன்வண்ணன் நாயகன் படத்தில் நடித்து சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தார் அதன் பின் திரை உலகில் தொடர்ந்து ஹீரோயினாக பல படங்களில் நடித்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் இவருக்கு அம்மா சித்தி போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களே கிடைத்தன இருப்பினும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து வருவதால் இவருக்கு என தற்போது வாய்ப்புகள் ஏராளமாக குவிந்து வருகிறது.
சரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் அஜித் மற்றும் ஜீவா குறித்து சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அஜித்தை பற்றிய அவர் கூறியது, நடிக்கும் பொழுது அவர் ரொம்ப கெத்தாக இருப்பார் என்று நினைத்தேன்.
ஆனால் தங்கமான மனசுள்ள குழந்தையாய் இருந்தாரு.. அழகுன்னா அவர்தான் என்றும் மிகவும் எளிமையாக இருக்கிறார் என்றும் கூறினார் ஒரு சீன் நடிக்கும் பொழுது சில வசனங்கள் அவங்க சொன்னா நல்லா இருக்கும்னு சொல்ல சொல்லுவார் அந்த அளவு நல்ல குணம் படைத்தவர் என்றும் சரண்யா தெரிவித்தார்.
மேலும் ஜீவாவும் நானும் நிறைய பேசி இருக்கோம் ராம் பட ஷூட்டிங் போது கொடைக்கானலில் பல நாள் இருந்தோம் அப்பொழுது ஷூட்டிங் இல்லமா ஜாலியாக இருந்தோம் அப்போ ஒவ்வொரு நாளைக்கு கொஞ்சம் சீன் தான் எடுத்தோம் அப்போ நானும் ஜீவாவும் கதை பேசிக்கிட்டே இருந்தோம் யாருடனும் இப்படி கதை பேசியதே கிடையாது.
ஜீவா குழந்தையிலிருந்து நடந்தது எல்லாம் சொன்னார் நானும் என் கதையை சொல்லி இருக்கேன் அது ஒரு மறக்க முடியாத ஜாலியான அனுபவம் என தெரிவித்தார். இந்த செய்திகள் தற்போது அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது மேலும் அவர்கள் இந்த செய்தியை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு பரப்பி வருகின்றனர்.