கேப்டன் விஜயகாந்த் 80 காலகட்டங்களில் இருந்து தமிழ் சினிமா உலகில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் போது ரஜினி, கமல் போன்றவர்கள் மக்களின் ஃபேவரட் நடிகர்களாக இருந்தாலும் விஜயகாந்த் ஒரு பக்கம் கிராமத்து கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி மேல் வெற்றி கொடுத்தார் ஒரு கட்டத்தில் ரஜினி கமலுக்கு நிகராக விஜயகாந்த் பேசப்பட்டார்.
சினிமா உலகில் எவ்வளவு வெற்றியை ருசித்தார்களோ அதே அளவுக்கு பலருக்கும் உதவியும் செய்துள்ளார். சினிமாவில் கூட பல நடிகர் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுப்பது தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளர் இயக்குனர் என பலருக்கும் வாய்ப்பு கொடுத்து அவர்களையும் தூக்கி விட்டுள்ளார். அப்படித்தான் ஒன்றுமே இல்லாத நேரத்தில் ஒரு பிரபல நடிகரை தூக்கிவிட்டு உள்ளார் விஜயகாந்த். அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.
தமிழ் சினிமா உலகில் ஹீரோ வில்லன் போன்ற பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் சரத்குமார் இவருக்கே ஒரு கட்டத்தில் சுத்தமாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. விஜயகாந்த் தான் தனக்கு வாய்ப்பு கொடுத்தார் அதன் பிறகு தான் சினிமாவில் ஜொலித்ததாக சரத்குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். விஜயகாந்த் சினிமா துறையில் தனது 40 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார்.
அவருக்கு சமீபத்தில் ஒரு பாராட்டு விழா நடைபெற்றது அதில் சரத்குமார் கலந்துகொண்டு மேடையில் பேசினார் அப்போது அவர் சொன்னது நான் இந்த மேடையில் நிற்பதற்கு காரணமே கேப்டன் விஜயகாந்த் தான். அவரைப் போன்ற ஒரு நல்ல மனிதரைப் பார்க்கவே முடியாது சினிமா துறையில் நுழைந்து நஷ்டப்பட்டு எல்லாத்தையும் இழந்து நின்றேன். வெறும் கையோடு மவுண்ட் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தேன் அப்பொழுது மேக்கப் மேன் ராஜு என்பவர் ராஜபாதர் தெருவுக்கு என்னை அழைத்துச் சென்று விஜயகாந்த்தை சந்திக்க வைத்தார்.
அப்பொழுது செல்வமணி இயக்கத்தில் புலன் விசாரணை படம் நடந்து கொண்டிருந்தது விஜயகாந்த் என்னை பார்த்தவுடன் வில்லன் வேடம் கொடுத்து இதில் நடி உனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என தெரிவித்தார் யார் இப்படி எல்லாம் சொல்வார்கள் விஜயகாந்த் சுயநலம் இல்லாத ஒரு மனிதர் ஆவார். நல்ல மனிதர்களால் மட்டுமே வில்லனாக நடிக்க வந்தவனுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்க முடியும் என சரத்குமார் கூறினார்.