தல அஜித் ஓட்டிய பைக்கை விற்று தான் வீட்டு வாடகையே கொடுத்தேன்..! மனதை நடிகர்..!

ajithkumar

I sold the bike driven by Thala Ajith and paid the rent: தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை திரட்டியவர் தான் தல அஜித் இவரை அல்டிமேட் ஸ்டார் என திரை உலக பிரபலங்கள் செல்லமாக அழைப்பார்கள். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சினிமாவில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமல்லாமல் பைக் ரேஸ் கார் ரேஸ் என பல்வேறு செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

அந்தவகையில் இவர் சர்வதேச அளவில் நடந்த பார்முலா ரேஸ் பந்தயத்தில் கூட கலந்துகொண்டு பெருமை சேர்த்தவர் அந்த வகையில் தல அஜித் நடிக்க இருக்கும் எந்த ஒரு திரைப்படத்திலும் பைக் அல்லது கார் ஏதேனும் ஒன்று கண்டிப்பாக இருக்கும்.

இது ஒரு பக்கமிருக்க தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் தான் சம்பத் ராம் இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக முதல்வன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது என்னவோ தீனா திரைப்படம் தான்.

படத்தில் நமது நடிகர் அஜித் கேங்கில் ஒரு அடியாளாக நடித்திருப்பார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சம்பத்ராம் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார் அந்தவகையில் அவர் கூறியது என்னவென்றால்  ஒரு பெரிய தயாரிப்பாளர் திரைப்படத்தில் இவர் கமிட் ஆனாராம்.

ajith deena
ajith deena

ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் ஆனது மிகவும் நல்ல கேரக்டர் என்ற ஒரே காரணத்தினால் சம்பளம் இல்லை என்றார்களாம் அதற்கு சம்பத்ராம் ஒப்புக்கொண்டு நடிக்க ஓகே சொல்லிவிட்டார் ஆனால் படப்பிடிப்பு  தூங்குவதற்கு வெகு நாட்கள் ஆகிவிட்டது இதனால் பல மாதங்கள் வேலை இன்றி தவித்த நமது நடிகர் தீனா படத்தில் தல அஜித் ஓட்டிய பைக்கை விற்று தான் தன்னுடைய வீட்டு வாடகையை கொடுத்தாராம்.