அஜித் சினிமாவையும் நன்கு புரிந்து வைத்துக் கொண்டே இருப்பதன் காரணமாகவே தான் அவர் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். அவருக்கு பக்க பலமாக யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன்னால் முடியும் என்று நம்பி அதை முயற்சி பண்ணி படி படியாக அதில் வெற்றி காணுகிறார். அதனால் தான் இந்த இடத்தில் நிலையாக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
அப்படித்தான் எல்லாப் படங்களுக்கும் கடினமாக உழைத்து தனது வெற்றியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கொண்டே போவதால் மக்கள் மதியில் பேசக்கூடிய நடிகராக வலம்வந்தார். சினிமா இண்டஸ்ட்ரியில் வாழும் பிரபலங்களை கேட்டால் கூட அஜித்தை பற்றி பெருமையாக மட்டும் தான் கூறுவார்கள் அந்த அளவிற்கு மக்களுக்கு உதவியையும் சினிமாவை நேசித்து வந்ததால் தற்போது வரையிலும் அவர் உச்சத்திலேயே இருக்கிறார். அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படம் அஜித்துக்கு மேலும் ஒரு வெற்றியைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப் படுகிறது காரணம் சமீப காலமாக நடிகர்கள் பலரும் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கின்றனர் அதை புரிந்துகொண்ட அஜித்தும் தற்போது தயாரிப்பாளர்கள் இயக்குனர்களையும் தாண்டி கதை அம்சத்தை நன்கு அறிந்து அதற்கேற்றவாறு நடிப்பதால் அவருக்கு வெற்றிகள் குவிகின்றன.
ஆனால் படத்தின் சூட்டிங் இன்னும் முடிந்தபாடில்லை இந்த படத்தை ரசிகர்கள் எதிர் பார்த்து காத்து கொண்டு இருகின்றனர் வெளிவந்தால் மிகப் பெரிய அளவில் கொண்டாட இருக்கின்றனர். இப்படி இருக்க கே எஸ் ரவிகுமார் அஜித்தை பற்றி பேசிய செய்தி ஒன்று தற்போது இணைய தள பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
கேஎஸ் ரவிக்குமாரும், அஜித்தும் இணைந்து வரலாறு என்ற திரைப்படத்தில் பணியாற்றினர் அப்பொழுது கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக 15 நாட்களில் தேவைப்படும் என இயக்குனர் சொல்ல அதற்கு அஜித் சார் ஒரே வாரத்தில் படத்தை கிளைமாக்ஸை எடுத்துவிடுங்கள் ஏனென்றால் அடுத்தடுத்து எனக்கு பல படங்கள் இருக்கின்றன.
அதில் நான் கமீட் ஆகிவிட்டேன் எனக் கூற அதற்கு கேஎஸ் ரவிக்குமார் நீங்கள் 3 விதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் அதை ஏழு நாட்களில் எடுக்க வேண்டும் என்றால் இரவு பகலாக ஷூட்டிங் நடைபெற வேண்டும் அது ரொம்ப கஷ்டம் என கூறினார் அதற்கு அஜீத் சார் பரவாயில்லை.
என்னால் முடியும் நான் நடிக்கிறேன் என கூறி இயக்குனரை ஆச்சரியப்படுத்தினார் அதுபோல தொடர்ந்து ஏழு நாட்கள் இரவு பகல் பார்க்காமல் அஜித் தொடர்ந்து நடித்தது முடித்து கொடுத்து எங்களை ஆச்சரியப்படுத்தினார் சினிமா உலகில் நான் பலதரப்பட்ட படங்களை இயக்கி உள்ளேன்.
ஒரு சில நடிகர்கள் மட்டுமே படத்தின் ஷூட்டிங்கிற்காக நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றுவார்கள் அதில் ஒருவர் அஜித் என குறிப்பிட்டார். இப்படி கடினமாக உழைத்தன் பலனாகத்தான் அவர் இன்று உச்சத்தில் இருக்கிறார் என கேஎஸ் ரவிக்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.