நயன்தாராவை வரக்கூடாதுன்னு கோபத்தில் சொன்னேன்.? அதை நினைத்து இன்று வருந்துகிறேன் பார்த்திபன் பேச்சு

nayanthara

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் முதலில் கேரளாவில் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி பின் படவாய்ப்பை அள்ளினார். மலையாளத்தில் ஒன்னு ரெண்டு திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்ட இவர் திடீரென தமிழ் பக்கம் திசை திரும்பினார்.

முதலில் சரத்குமாரின் ஐயா படத்தில் நடித்து வெற்றி கண்டார் அதனைத் தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் ரசிகர்கள் உருவாகினார்.  அவர்கள் நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை வைத்து அழகு பார்த்தனர். பிறகு லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சினிமா மார்க்கெட் மிகப்பெரிய உச்சத்தை தொட்டது.

தற்பொழுது டாப் நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படங்களில்  போன்ற நடிகர்களுடன் நடிப்பது மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளி வருகிறார். இப்படிப்பட்ட நடிகை  நயன்தாராவை ஒரு பிரபலம் எனது படத்தில் நடிக்க வேண்டாம் என உதறி தள்ளினார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தமிழ் சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் அப்படித்தான் குடைக்குள் மழை என்னும் படத்தை எடுத்தார் இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முதலில் அழைத்துள்ளார் ஆனால் அன்று காலை 8 மணிக்கு வரவில்லை.. பார்த்திபனுக்கு போன் செய்து நேற்று என்னால் வர முடியவில்லை இன்று நான் பஸ் ஏறுகிறேன் நாளை வந்து விடுவேன் என்று கூறினார்.

இதைக்கேட்டாக பார்த்திபனுக்கு செம்ம கோபம் வந்துவிட்டது நீங்கள் வரவேண்டாம் என கூறிவிட்டாராம். அப்படி எனக்கு  கோபம் வரும் என பார்த்திபன் கூறினார். இன்று நயன்தாரா லேடிசூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடும் பொழுது அம்மாவுடன் பஸ்ஸில் கேரளாவில் இருந்து இங்கு வருவார் ஆனால் தற்பொழுது விமானத்தின் மூலம் பறக்கினார் என பேட்டியில் கூறினார்.