மறைந்த நடிகை சௌந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க எனக்கு ரொம்ப ஆசை.! பிரபல நடிகை விரும்பம்.! அவரே பேட்டியில் சொன்னது.

sowandhariya

தமிழ் திரை உலகில் சமீபகாலமாக சைலண்டாக இருந்துகொண்டு சாதித்தது சில பிரபலங்களின் வாழ்க்கையை படமாக எடுக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் பல படங்கள் வெளிவந்து மக்கள் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த உள்ளன.  இப்படி இருக்கின்ற நிலையில் மக்கள் மனதில் இடம் பிடித்து மறைந்த நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை படத்தில் நடிக்க வேண்டும் என ஒரு இளம் நடிகை ஆசை தெரிவித்துள்ளார்.

தமிழில் 1993 ஆம் ஆண்டு வெளியான பொன்னுமணி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி விஜயகாந்த் போன்ற பல பிரபலங்களுடன் கைகோர்த்து தனது திறமையை வெளிக்காட்டி சிறப்பாக பயணித்தார். நடிகை சௌந்தர்யா அருணாச்சலம், காதலா காதலா, தவசி, சொக்கத்தங்கம்  போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

இப்படி வெற்றி மேல் வெற்றியை குவித்து வைத்து சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த சௌந்தர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு விமான விபத்தில் சிக்கி மரணமடைந்தார். தற்போது அவரது பயோபிக்கில் நடிக்க ஆசை என நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

காரணம் சிறுவயதில் இருந்தே என்னை பார்த்த பலரும் நீங்கள் நடிகை சௌந்தர்யா போல இருப்பதாக கூறினார்கள் மேலும் அப்பாவும் அதை அடிக்கடி சொல்வார் அதனால் அவர் மீது எனக்கு சிறு வயதிலிருந்தே அதிக பிரியம் உண்டு அந்த காரணத்தினால் அவரது பயோபிக்கில் நடிக்க வேண்டுமென எனக்கு மிகப்பெரிய ஒரு ஆசை உள்ளதாக தெரிவித்தார்.

rashmika mandanna
rashmika mandanna

நடிப்புக்கு பேர்போன நடிகை ராசி கண்ணா அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பார் அதில் தனது திறமையை  காட்ட இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு மிக விரைவிலேயே நிறைவேற வேண்டும் எனவும் அவரது ரசிகர்கள் தற்போது கூறி வருகின்றனர்.