தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கிய இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளது.
அந்தவகையில் இந்த திரைப்படத்தில் கமலஹாசன் தனக்காக எந்த ஒரு காட்சிகளையும் மாற்றி அமைக்க வேண்டாம் அனைவருக்கும் ஏற்றபடி காட்சிகள் அமைக்கும்படி லோகேஷ் இடம் கேட்டுக்கொண்டார். இதன் காரணமாகவே இந்த திரைப்படம் மிகவும் அற்புதமாக இருந்தது என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
பொதுவாக நமது இயக்குனர் லோகேஷ் அவர்கள் கமல்ஹாசனின் தீவிர ரசிகன் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்தவகையில் லோகேஷ் அவர்கள் கமல்ஹாசன் நடித்த அனைத்து திரைப்படங்களையும் பார்த்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படத்தில் லோகேஷ் பிடித்த திரைப்படம் என்றால் அது விருமாண்டி திரைப்படம் தான்.
அந்தவகையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றில் கமல்ஹாசன் அவர்கள் மொட்டை அடித்தபடியே ஒரு காட்சியில் நடித்திருப்பார். ஆனால் அந்த காட்சியை ஒருமுறை தான் எடுக்க முடியும் ஏனெனில் மறுமுறை இந்த காட்சியை எடுக்க அவரால் மற்றொரு முறை மொட்டை அடிக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை நடிகர் கமலஹாசன் அவர்கள் தானே இயக்கியது மட்டுமில்லாமல் நடித்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவருடைய திரைப்படங்கள் அனைத்துமே எனக்கு பிடிக்கும் என்று அவர் கூறியது மட்டுமில்லாமல் மேலும் அவருடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் என லோகேஷ் கூறியுள்ளார்.