தமிழ் சினிமாவில் பல இளம் நடிகர்கள் நடித்த வருகிறார்கள் அந்த வகையில் இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் அசோக் செல்வன் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகிய பில்லா இரண்டாவது பாகத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய சூது கவ்வும் என்ற திரைப் படத்திலும் நடித்திருந்தார்.
சூது கவ்வும் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது மேலும் பீட்சா 2, தெகிடி ,சவாலே சமாளி, 144 ,கூட்டத்தில் ஒருத்தன், என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். என்னதான் இவர் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் 2020ஆம் ஆண்டு வெளியாகிய ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய சினிமா கேரியரை உயர்த்திக் கொண்டார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து மன்மதலீலை, ஹாஸ்டல் என அடல்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்ததால் இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்து கொண்டே இருக்கிறது அப்படி இருக்கும் நிலையில் அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் தான் வேழம் என்ற திரைப்படத்தில் அசோக் செல்வன் அவர்களுடன் இணைத்து ஜனனி ஐயர் ஐஸ்வர்யா மேனன் சங்கிலி முருகன் என பல பிரபலங்கள் நடித்து இருந்தார்கள்.
இந்த திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இந்த நிலையில் சமீபத்தில் வேழம் படக்குழுவினர் பேட்டி ஒன்றை கொடுத்தார்கள் அந்த பேட்டியில் அசோக் செல்வன் ஜனனி ஐயர் ஐஸ்வர்யா மேனன் இயக்குனர் என பலரும் கலந்து கொண்டார்கள். அப்பொழுது அந்த பேட்டியில் பேசிய நடிகைகள் அசோக்செல்வன் இப்பொழுது கதையை கேட்பதே கிடையாது படத்தில் எத்தனை ஹீரோயின் என்பதுதான் கேட்கிறார்.
அதுவும் இவருக்கு 5 ஹீரோயின் இருக்கிறார்களா என்று கேட்கிறார் எனக் கூறினார்கள் அதற்கு அசோக் செல்வன் கதைக்கு முக்கியத்துவம் இருப்பதால் அப்படி கூறினேன் என கிண்டலாக கூறினார் அது மட்டும் இல்லாமல் நான் காண்ட்ராக்ட் போடும்பொழுது இரண்டு அல்லது மூன்று ஹீரோயின்கள் வேண்டும் என்று என விளையாட்டாக பேட்டியில் கூறியுள்ளார் அசோக் செல்வன்.
இதை பார்த்த ரசிகர்கள் இத்தனை படத்தில் நடித்தும் உங்களுக்கு இன்னும் ஹீரோயின் மீது உள்ள ஆசைகுறையவே இல்லையா என கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள்.