வெள்ளித்திரையே கதியென கிடந்த மக்களை சின்னத்திரை பக்கம் வெகுவாக திரும்பி பார்க்க வைத்த தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி பெரும்பாலும் சீரியல்களை கொடுத்தாலும் அவ்வப்போது வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
அந்த வகையில் பிக் பாஸ் சீசன், கலக்கப்போவது யாரு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது அதில் ஒன்றாக இணைந்துள்ளது தான் பிபி ஜோடிகள் நிகழ்ச்சி. இதில் பிக்பாஸில் பங்கு பெற்ற பல பிரபலங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் தாடி பாலாஜி மற்றும் நிஷா ஆகியோர் இணைந்து நடனம் ஆடி வருகின்றனர். புதிய படமொன்றில் காமெடி நடிகர் தாடி பாலாஜி விஜய் உடனான நட்பு குறித்து சமீபத்தில் பேசி உள்ளார் அவர் கூறியது.
கடவுள் கொடுத்த வரம் தான் விஜய்யின் நட்பு. அவருடன் நான் இரண்டு வருடங்களுக்கு மேலாக பயணித்து உள்ளேன் ஷூட்டிங்கை தாண்டி எப்பொழுதும் அவர் என்னுடன் நன்றாகவே பழகுவார்.
ஒரு முறை எனது அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை. அத நாள் நான் மனமுடைந்து இருந்தேன் அதை கண்டு பிடித்த நடிகர் விஜய் என்னிடம் அதைக் கேட்காமல் எப்படியோ அந்த தகவலை கண்டுபிடித்து என்னிடமே கூறாமல் எனது அப்பாவை நேரில் சந்தித்து அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் கொடுத்து வந்தார்.