விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஐ திரைப்படத்தில் எமி ஜாக்சனுக்கு பதிலாக வேறு ஒரு கதாநாயகி தான் நடிக்க இருந்தாராம் அந்த நடிகை நடித்திருந்தாலும் இத்திரைப்படத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
பொதுவாக பல நடிகர்கள் திரைப்படத்தின் கதாபாத்திரத்திற்காக தனது உடலை வருத்திக்கொண்டு அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக் கொண்டவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அந்த வகையில் முதலில் விக்ரமை கூறலாம் ஏனென்றால் இவரின் பல ஒர்க்கவுட் வீடியோக்கள் போன்றவற்றை நாம் பார்த்திருக்கிறோம்.
அந்தவகையில் ஐ திரைப்படத்தில் இவர் எந்த அளவிற்கு தனது உடலை வருத்திக் கொண்டார் என்பதயும் பார்த்தோம். இத்திரைப்படம் 2015ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியானது. இத்திரைப்படத்தில் விக்ரம் மற்றும் இவருக்கு ஜோடியாக நடிகை எமி ஜாக்சன் நடித்திருந்தார்.
எமி ஜாக்சனும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இத்திரைப்படம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அந்தவகையில் இத்திரைப்படத்தில் நடிகை எமி ஜாக்சன் நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு பதிலாக நடிகை சமந்தா தான் நடிக்க இருந்தாராம்.
திரைப்படத்தில் சமந்தா நடித்திருந்தாலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் அசத்தியிருப்பார். ஆனால் சில காரணங்களால் அவரால் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முடியாமல் போனதாம். அதன் பிறகு தான் படக்குழுவினர்கள் நடிகை எமி ஜாக்சனை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.