நடிகர் சூர்யா தொடர்ந்து சமூக அக்கரை உள்ள திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார் இப்பொழுதுகூட இயக்குனர் பாலாவுடன் இணைந்து மீனவர் சம்பந்தப்பட்ட ஒரு படத்தில் நடித்து வருகிறார். முதல்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக முடிந்த நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் என்ற திரைப் படத்தில் நடிக்க உள்ளார். தொடர்ந்து இரண்டு டாப் இயக்குனருடன் இணைந்தால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சூர்யாவுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை இழந்து விட்டேன் என பிரபல நடிகை பேட்டி ஒன்றில் தெரிவித்தார் அவர் வேறு யாருமல்ல நடிகை சோனியா அகர்வால். இவர் சொன்னது சூர்யா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கஜினி.
இந்தப் படத்தில் நயன்தாரா, அசின் ஆகியோர்கள் சூர்யாவுக்கு ஹீரோயின்களாக நடித்து இருந்தனர். இந்த இரண்டு ஹீரோயின்களில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை எனக்கு தருவதாக கூறினார்கள் தெளிவாக எந்த ஹீரோயின்கதாபாத்திரம் என்பதை மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டார்.
எது எப்படியோ சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பை அவர் இழந்தது தெள்ளத் தெளிவாக தெரியவருகிறது. சூர்யாவுடன் சோனியாஅகர்வால் நடித்திருந்தால் இன்று பட வாய்ப்பை அள்ளி ஒரு உச்ச நட்சத்திரமாக ஜொலித்து இருப்பார் ஆனால் அதை இழந்து விட்டாரே.. இச்செய்தி நடிகை சோனியா அகர்வால் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுக்கத் தான் செய்கிறது