அண்ணா நீங்க கொடுத்த வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் இப்போ ஒரு வாய்ப்பு கொடுங்கள் என வெற்றி மாறனுடன் கேட்கும் நடிகர்.! ஓகே சொல்வாரா.?

vetrimaran
vetrimaran

சமீபகாலமாக வெள்ளித்திரையில் அதிரிபுதிரி ஹிட் படங்களை கொடுத்தோடு மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுக்கு வெற்றியை தரும் இயக்குனராக உள்ளவர் வெற்றிமாறன். இவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும் தோல்வியை சந்திக்காமல் இருப்பதால் தற்பொழுது நடிகர்கள் பலரும் அவரிடம்  போய் அண்ணா எனக்கு ஒரு  படம் நீங்க எடுத்துக் கொடுக்கணும் என கூறி வரிசைகட்டி தற்போது நிற்கின்றன.

சினிமா ஆரம்பத்தில் இளம் தலைமுறை நடிகர்களை வைத்து படங்களை கொடுத்துக் கொண்டிருந்த வெற்றிமாறன் படங்கள் ஒவ்வொன்றும் அதிரிபுதிரி ஹிட் அடித்தது மேலும் அது வித்தியாசமான கதை களம் இருந்ததால் அவரை சரியாக புரிந்து கொண்ட தனுஷ் அவரை விடாமல் தன்வசப்படுத்திக் கொண்டார் மேலும் தனுஷும் வெற்றிமாறனும் சிறப்பு அம்சம் உள்ள கதைகளை கொடுக்க அதில் தனுஷ் திறமையை வெளிப்படுத்தி தொடர்ந்து ஹிட் கொடுத்தார்.

தற்போது தமிழில் தாண்டி உலக அளவில் பிரபலமடைந்து இருக்கிறார் தனுஷ். அதேபோல மற்ற நடிகர்களும் இப்பொழுது வெற்றிமாறன் தேடிச்சென்று எனக்கு இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கொடுங்கள் நானும் மிகப் பெரிய ஆளாக மாறுகிறேன் என கேட்டுக் கொள்கின்றனர் இந்த நிலையில் தனுஷை தொடர்ந்து சூர்யாவுடன் வாடிவாசல் விஜயுடன் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இப்படி இருக்க வெற்றிமாறனை தேடிவந்த சிம்பு அண்ணா நீங்க குடுத்த  படத்தை நான் தெரியாமல் மிஸ் பண்ணிட்டேன் அதற்கு பதிலாக இன்னொரு வாய்ப்பு கொடுங்க நான் ஹிட் கொடுகிறேன் என கேட்டுள்ளாராம். ஆனால் வெற்றிமாறன் ஓரிரு படங்களில் கமிட்டாகி உள்ளதால் அதை முடித்த பிறகு இதனால் சிம்புவுடன் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

வடசென்னை படத்தில் முதலில் சிம்புவை தான் வெற்றிமாறன் அளிக்க உள்ளார் ஆனால் இப்போதைய சூழலில் நடிகர் சிம்பு  தனுஷ் மாதிரி வளர வெற்றிமாறன் உதவி செய்தால் மட்டுமே முடியும் என கணக்கு போட்டு உள்ளாராம்.