நான் உன்னை ரொம்ப மிஸ் செய்கிறேன் – புகைப்படத்தை வெளியிட்டு வருத்தப்பட்ட நடிகை சமந்தா.! அறுதல் சொல்லும் ரசிகர்கள்.

samantha
samantha

சினிமா உலகில் நடிக்கும் நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கும் போதே காதல் வயப்படுவது மிக சாதாரணமாகி வருகிறது அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய விட்டால் அந்த காதல் ஒருகட்டத்தில் கல்யாணத்தில் முடியும். கல்யாணம் செய்துகொண்ட பிறகு கணவன்-மனைவிக்குள் சிறிது அட்ஜஸ்ட்மெண்ட் இருந்தால் போதும் வாழ்க்கை ஜம்முன்னு ஓடும்.

ஆனால் சில தேவையில்லாத பிரச்சினைகளை இழுத்துப் போட்டு விட்டால் அது விவாகரத்தில் முடியும் அதிலும் சினிமா உலகில் இருக்கும் நடிகர் நடிகைகள்  திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகள் வாழ்க்கையை நன்றாக வாழ்ந்தாலும் ஒரு கட்டத்தில் விவாகரத்து என்ற பெயரில் பிரிந்து விடுகின்றனர் அந்த லிஸ்டில் இணைந்தவர் தான் சமந்தா.

நடிகை சமந்தா தமிழில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தினார் அதன் காரணமாகவோ என்னவோ இவரது சினிமா பயணம் மற்ற மொழிகளிலும் பரவியது அதிலும் குறிப்பாக தெலுங்கில் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக மாறியது. ஒரு கட்டத்தில் நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் இடையே காதல் வயப்பட்டது பின் திருமணம் செய்துகொண்டனர்.

நான்கு வருடங்கள் வாழ்க்கையை வாழ்ந்த நிலையில் திடீரென சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிந்தனர். சமந்தா இப்போ முழு நேரமும் சினிமாவில் பயணிக்க தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். இப்பொழுது சமந்தாவை தடுக்க யாருமில்லை என்பதால் அவருக்கு பிடித்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சமூக வலைதளப் பக்கங்களில் போட்டோ ஷூட் என்ற பெயரில் தாறுமாறான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சமந்தா ஒரு புதிய பதிவை போட்டு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளார் அதாவது தன் உயிருக்குயிராக வளர்த்த இரண்டு நாய்க்குட்டிகளை குறித்து பதிவிட்டுள்ளார் ஆம் நாக சைதன்யாவை விட்டு பிரிந்து வரும் போது அங்கு வளர்த்த இரண்டு நாய்க் குட்டிகளில் ஒரு நாய்க்குட்டியை மட்டுமே தன்னுடன் எடுத்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் ஒரு நாய்க்குட்டி அங்கேயே இருப்பதால் அதனை தற்போது மிஸ் செய்வதாக அவர் கூறியுள்ளார்.

samantha
samantha