நான் தப்பு செய்கிறேன்.! மக்களே.. நீங்கள் அப்படி செய்யாதீர்கள் – நடிகர் விஜய் சேதுபதி அட்வைஸ்.!

vijay-sethupathy-
vijay-sethupathy-

நடிகர் விஜய் சேதுபதி சினிமா உலகில் ஹீரோ வில்லனாக நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாக மாறுவதால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் ஏராளமாக குவிவதால் சம்பளத்தையும் அதற்கு ஏற்றார் போல அதிகரித்து கொண்டே இருக்கிறார்.

தமிழை விட மற்ற மொழிகளிலும் விஜய் சேதுபதி நடித்து வருவதால் சற்று சம்பளம் அதிகம் என சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி தற்போது ஹீரோ வில்லனாக தமிழில் ஒரு பக்கம் நடிக்க மறுப்பக்கம் ஹிந்தியில் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஹிந்தியில் மட்டுமே மூன்று நான்கு படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதில் ஒன்றாக ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் தெலுங்கில் புஷ்பா 2 என மூன்று முக்கியமான படங்களில் நடிக்கிறார் இந்த படங்கள் வெற்றி பெரும் பட்சத்தில் இன்னும் அவரது மார்க்கெட் அதிகரிக்கும் என தெரிய வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார் அதாவது சினிமா உலகில் மற்ற நடிகர்கள் உடம்பை பிட்டாக வைத்துக் கொண்டு சாப்பாட்டை கண்ட்ரோல் ஆக சாப்பிடுகின்றனர்.

இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக விஜய் சேதுபதி இருக்கிறார் பேட்டியில் அவர் சொன்னது. மனசுக்கு பிடித்ததை சாப்பிடுங்கள் சந்தோஷமாக இருங்க அதற்கு பிறகு உடற்பயிற்சி நடை பயிற்சி செய்கிறதை விட்டுடாதீங்க நான் அதை பண்றது இல்லை என்ன மாதிரி நீங்களும் இருந்து விடாதீங்க என நடிகர் விஜய் சேதுபதி கூறி முடித்தார். இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பெரிய அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி லால் சிங் சதா திரைப்படத்திலிருந்து வெளியேற காரணம் ராணுவ வீரனாக உடல் எடையை குறைத்து நடிக்க வேண்டிய சூழல் வந்ததாம் ஆனால் அவரால் உடல் எடையை குறைக்க முடியாததால் அந்த படத்தில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.