Comedy Actor Muthukaalai : தமிழ் சினிமா உலகில் எத்தனையோ காமெடி நடிகர்கள் இருக்கின்றனர் ஆனால் மக்கள் மத்தியில் பிரபலமான காமெடி நடிகர்கள் என்றால் அது வடிவேலு விவேக கவுண்டமணி செந்தில் தான் ஆனால் அவர்களுக்கு துணையாக அல்லது பின்புறத்தில் நடிக்கும் காமெடி நடிகர்களை நாம் மறந்து விடுகிறோம்..
அப்படி திறமை இருந்தும் வளர முடியாமல் இன்று வரை இருந்து வருபவர் முத்துக்களை. இவர் வடிவேலுவின் பல படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடத்தி உள்ளார் வடிவேலும், முத்துகாளையும் வரும் காமெடிகள் என்றும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. முத்துக்காளை என் புருஷன் குழந்தை மாதிரி என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து வின்னர், சீனா தானா, தவசி என சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு வடிவேலுடன் கைகோர்த்து காமெடிகளில் மிரட்டி இருகிறார் முத்துக்களை தற்பொழுது கூட பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
காமெடியனாக நடித்து வரும் முத்துக்களை உண்மையில் சண்டை மாஸ்டர் ஆனால் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததால் சினிமாவில் காமெடியன்னாக நடிக்க தொடங்கினார். அது மக்கள் மத்தியில் பிரபலமானதால் காமெடியனாகவே இன்று வரை நடித்து வருகிறார்.
இந்த நிலையில் முத்துக்காளை பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அவர் சொன்னது.. நான் வடிவேலு உடனான துணை கதாபாத்திரங்களில் நடித்து தான் பெரிய தவறு செய்து விட்டேன் எனவும் தனக்கென தனி வழியில் சென்று இருந்தால் இன்று அவரைப் போல நானும் உயர்ந்திருக்கலாம் எனவும் கூறி இருக்கிறார்.