இவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.? அதுக்காக மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கும் ப்ரியா மணி.? யாரு சாமி அது.?

priya-mani
priya-mani

குழந்தையாக இருக்கும்போதே சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை பிரியாமணி ஒரு கட்டத்தில் ஹீரோயின் என்ற அந்தஸ்தைப் பெற்றவுடன் குடும்பங்கள் கவரும்படியான கிராமத்து கதையை தேர்ந்தெடுத்து நடித்ததால் இவருக்கு ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பு சினிமாவுலகில் கிடைத்தது.

அதை சரியாக பயன்படுத்தி தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த இவருக்கு பருத்திவீரன் மேலும் ஒரு சிறப்பான அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது இதன் மூலம் அவர் தேசிய விருதையும் கைப்பற்றினார்.

இப்படி வலம் வந்து கொண்டிருந்த பிரியாமணிக்கு தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை ஏற்று நடித்தார் பலவேறு மொழியில் அங்கும் இங்கும் நடித்தால் அம்மணி எந்தொரு மொழிலும் நிரந்தர இடம் கிடைக்காமல் போனது. அதோடு மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

இந்த நிலையில் ப்ரியாமணி திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு ஒரு சில பட வாய்ப்புகள் அவ்வபோது கதவை தட்டிவந்தன அதை விட்டு விடக் கூடாது என்பதற்காக உடல் எடையை குறைத்து பிட்டாக மாறி நடித்தார். அந்த படங்களும் அதிரி புதிரி ஹிட் அடிக்க பல்வேறு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகின்றன.

அதுவும் தெலுங்கில் பிரியாமணிக்கு நல்ல மவுசு இருப்பதோடு நல்ல படங்கள் நிறைய குவிகின்றன. அங்கு பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் தற்போது டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் பிரியாமணி ஒரு நடிகரின் படத்தில் மட்டும் இதுவரை நடிக்காமல் இருந்து வருகிறார். அந்த நடிகர் வேறு யாருமல்ல டாப் நடிகர் வெங்கடேஷ் தான்

இவருடன் இணைந்து நடிக்க மூன்று முறை பிரியாமணிக்கு வாய்ப்பு வந்தது. அப்பொழுது கால்ஷீட் பிரச்சனை காரணமாக அது எல்லாமே வேறு நடிகைகளுக்கு போனது மேலும் அப்போது இவர் பல்வேறு திரைப்படங்களில் கால்சீட் கொடுக்க முடியாமல் போனது.

இந்த நிலையில் மீண்டும் வெங்கடேஷ் படத்தில் நடிக்க பிரியாமணிக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பையும் விட்டுவிட்டால் தம் முன்னேறுவதற்கான அடியை நாமே தடுக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டு மற்ற படங்களின் கால்ஷீட்களை வாங்கி இந்த படத்திற்கு கொடுத்து உள்ளார். இந்த படத்திற்காக அவர் மற்ற படங்களை ஒதுக்கி விட்டு இந்த படத்திற்காக மிகப்பெரிய ரிஸ்க் எடுத்துள்ளார் இந்த படம் நிச்சயம் ஹிட் அடிக்க வேண்டும் என மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து உள்ளார்.

வெங்கடேஷ் மற்றும் பிரியாமணி இணையும் இந்த படத்திற்கு நாரப்பா பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த படம் தமிழில் வெளியான அசுரன் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருடன் நடிக்க ரொம்ப பிடிக்கும் எனவும் கூறினார்.