விஜய்யை எனக்கு பிடிக்கும்.. ஜேசன் சஞ்சய் பற்றி நான் சொன்ன வார்த்தை.? பிக்பாஸ் ரவீனா தாஹா பேச்சு

Vijay
Vijay

Raveena Daha : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ரவீனா தாஹா இவர் இளம் வயதிலேயே திரை உலகிற்கு நடிக்க வந்து விட்டார் முதலில் “கதை சொல்ல போறோம்” என்ற படத்தில் நடித்த அறிமுகமானார் அதன் பிறகு இவர் தேர்ந்தெடுத்த நடித்த ஜில்லா, ஜீவா, பூஜை..

புலி பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம், ராட்சசன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்வ்வாக இருக்கும் ரவீனா தாஹா தொடர்ந்து கிளாமர் மற்றும் க்யூட்டான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் இதனால் பெரிய அளவில் பேமஸானார்.

இந்த நிலையில் தான் விஜய் டிவி சீசன் சீசன்னாக நடத்தி வரும் பிக்பாஸ் சீசன் 7ல் இவரை போட்டியாளராக உள்ளே இழுத்து போட்டுள்ளது. ரவீனா தாஹா – வுக்கு  தான் 19 வயது நடந்து வருகிறது. இவர் பிக்பாஸ் வீட்டில் எப்படி தாக்கு பிடிக்க போகிறார் என்பதை பார்க்க பெரும் கூட்டம் இருக்கிறது.

ரவீனா தாஹா சமீபத்தில் விஜய் மற்றும் மகன் ஜேசன் சஞ்சய் குறித்து பேசி இருந்தார் ஆனால் அது தவறாக மாறியது. ஜேசன் சஞ்சய்யை பிரவீனா காதலிப்பதாக தகவல் வெளியாகின இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். நான் அப்படி சொல்லவே இல்லை..

Raveena daha
Raveena daha

விஜயின் தீவிர ரசிகை என்பதால் அவருடன் நடிக்க ஆசைப்பட்டேன் ஆனால் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்பதால் அவருடைய மகன் சஞ்சய் உடன் ஜோடியாக நடிக்க வேண்டும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறினேன் இதை தவறாக புரிந்து கொண்டு காதலிப்பதாக வதந்திகளை பரப்பி விட்டார்கள் என கூறி உள்ளார்.