தற்பொழுது ஆஸ்திரேலிய தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில் 3 டி20 போட்டிகளும். 3 ஒருநாள் போட்டிகளிலும் மோத இருக்கிறார்கள்.இதில் முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 107 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி.
முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 196 ரன்கள் குவித்தது பிறகு 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி ஆடியது.அப்பொழுது ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை எதிர்கொண்ட தென்ஆப்பிரிக்கா அணி 89 ரன்களுக்கு சுருண்டது. அதனால் 107 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
அகர் ஹாட்ரிக் விக்கெட் உட்பட 5 விக்கெட்டுகளை தட்டி துவக்கினார் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இந்த நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய அகர் தற்பொழுது உள்ள கிரிக்கெட்டில் எனக்குப் பிடித்த வீரர் என்று நான் கருதுவது ஆல்-ரவுண்டராக உருவாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது இதற்கு இந்திய அணியின் வீரரான ஜடேஜாவை தான் தோன்றுகிறது.
ஜடேஜாவுடன் இந்தியாவிற்கு எதிரான தொடரில் நீண்ட நேரம் பேசினேன் அருமையான உரையாடல். அதுவும் உலகிலேயே எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் என்றால் ஜடேஜா தான் அவரைப்போல் நானும் ஆட விரும்புகிறேன். பேட்டிங் பவுலிங் ஃபீல்டிங் என அனைத்திலும் மிக சிறப்பாக விளையாடுகிறார். அதேபோல் பந்தையும் மிகவும் அருமையாக சுழற்றுகிறார்.
அதேபோல் பேட்டிங் செய்யும்போது நேர்மறையான சிந்தனையுடனும் விளையாடுகிறார். அதுமட்டுமில்லாமல் பில்டிங் பற்றி குறை கூற முடியாது அந்த அளவு உலகத்தரம் வாய்ந்த பில்டிங் செய்கிறார். என ஜடேஜாவை ஆகா ஓகோ என்று அஷ்ட அகர் புகழ்ந்து பேசினார்.