தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஜொலிபவர் தளபதி விஜய் இவர் கடைசியாக நடித்த வாரிசு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நிலையில் இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த படம் முழுக்க முழுக்க போதை பொருளை மையமாக வைத்து உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது அதனால் இந்த படத்தில் ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது. படத்தில் விஜய் உடன் கைகோர்த்து அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், பிக்பாஸ் ஜனனி, திரிஷா மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.
படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த நிலையில் இன்று லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி விஜய் மற்றும் லோகேஷ் எடுத்துக் கொண்ட புகைப்படம் கூட இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில்..
தளபதி விஜய் வில்லு படத்தின் சமயத்தில் நடிகர் அஜித் குறித்து பேசி உள்ளார். அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் வில்லு திரைப்படத்தின் பொழுது பேட்டி ஒன்றில் உங்க சமகால நடிகர்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது பிடித்தது என்ன என கேட்டுள்ளனர் அப்பொழுது வரிசையாக விக்ரம் சூர்யா பற்றி பேசி வந்த விஜய்..
அஜித் பற்றியும் பேசினார் அப்பொழுது அவர் சொன்னது அஜித்திடம் எனக்கு ரொம்ப பிடித்தது அவருடைய தன்னம்பிக்கை தான் என கூறியுள்ளார். இந்த செய்தி அஜித் விஜய் ரசிகர்கள் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல வைரலாகி வருகின்றன.