என்னுடைய ரசிகர்களின் மனநிலை என்ன என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.. நானும் ரெடி.? இப்ப நடக்காது.?

sunny leone
sunny leone

நடிகை சன்னிலியோன் சினிமாவுலகில் என்றி ஆவதற்கு முன்பாக அந்த மாதிரி படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது எது எப்படியோ அவரது வாழ்க்கை தற்போது திசைமாறி சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் முதலில் ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமா பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார். அதிலும் தமிழில் தற்போது இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

முதலில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய நிலையில் அதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓ மை கோஸ்ட், வீரமாதேவி போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு பேய் படத்திலும் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியா கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த சன்னிலியோன் கூறியது.

இப்பொழுது நடிகை சன்னிலியோன் அனாமிகா என்ற வெப்சீரிஸில் நடித்துவருகிறார். அனாமிகா செட்டில் நான் செலவழித்த ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ஏனென்றால் சண்டைக்காட்சிகள் எனக்கு உண்மையிலேயே பிடிக்கும் எனது நிஜ வாழ்க்கையில் நான் ஒருபோதும் சண்டையிட மாட்டேன் எனவே இந்த வித்தியாசமான விஷயங்களை எப்படி செய்வது என்று கற்றுக் கொள்வது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

அனாமிகா என்று படத்திற்கு பெயர் வைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. விக்ரம் சாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன் நடிப்பாக இருந்தாலும் சண்டை காட்சியாக இருந்தாலும் என்னையும் எண் கதாபாத்திரத்தையும் அவர் எப்படி உருவாக்கினார் என்பது இதுவரை நான் அனுபவித்திராத ஒன்று. ஒருவரை ஒருவர் தங்கள் முழு முயற்சியையும் என் மீது நம்பிக்கை வைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

நான் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிப்பேன் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் அவ்வாறு நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் நான் வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்க ஆசைப்படுகிறேன். மேலும் மக்கள் என்னிடம் வழக்கமாக எதிர்பார்க்கும் கதாபாத்திரம் இது அல்ல நான் என் ரசிகர்களை நேசிக்கிறேன் அவர்கள் என்னை முழுமனதுடன் ஏற்றுக் கொள்வார்கள் அவர்கள் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் காலப்போக்கில் நிச்சயம் புரிந்து கொள்வார்கள் என கூறினார்.