இந்த மாஸ் திரைப்படம் திரையரங்கில் வரும்போதுதான் அஜித்தின் பவர் எனக்கு தெரிந்தது.! பிரபலம் அதிரடி பேச்சு.

ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவருடன் இணைந்து நடிக்க இளம் அடியிலிருந்து முன்னணி நடிகைகள் வரை பலரும் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். இவருடன் சேர்ந்து நடித்தால்தன் சினிமா உலகில் ஒரு இடத்தை பிடித்து விடலாம் என நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினால் போதும் என இருந்து வருகின்றனர்.

ஆனால் ஒரு நடிகையோ விஜயுடன் இந்தப் படத்தில் நடித்ததற்கு வருத்த படுவதாக தெரிவித்து நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜயுடன் இணைந்து காஜல் அகர்வால், பாலாஜி சத்தியன், மனோபாலா, பிரகாஷ் மான், ஜெயராம், பிரசாந்த் நாயர் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர் இவர்களுடன் இணைந்து நடித்தவர் தான் அக்ஷரா கவுடா.

இவர் இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் அதில் துப்பாக்கி படத்தில் நடித்தது தனக்கு மிகவும் வருத்தமடைய செய்துள்ளதாக கூறினார்.துப்பாக்கி படத்தில் நடித்ததன் மூலம் ஏ ஆர் முருகதாஸ் ,நடிகர் விஜய், சந்தோஷ் சிவன் ஆகியோரின் நட்பு கிடைத்தது தனக்கு மிகவும் சந்தோஷமாகவும் கூறினார். ஆனால் இப்படத்தில் தனக்கு சிறிய வேடம் கொடுத்ததால் அதில் எந்த ஒரு பயனும் இல்லை என கூறி வருத்தமடைந்தார் மேலும் தல அஜித் அவர்களுடன் இணைந்து ஆரம்பம் என்ற திரைப்படத்தில் நடித்தேன்.

akkashara gowda
akkashara gowda

அது ஒரு நல்ல அனுபவம் அது மட்டுமில்லாமல் அவர் எனக்கு பல டிப்ஸ்களை வழங்கினார் ஆரம்பம் படம் ரிலீசாகும் வரை தல அஜித் உடைய பவர் எனக்கு தெரியாது என கூறினார்.மேலும் அஜித் அவர்கள் சினிமாவையும் தாண்டி பல விஷயங்களை தெரிந்து வைத்துள்ளார் அவர் மிகச்சிறந்த மனிதர் என கூறினார்.