விஜயுடன் ஒரு படம் தான் பண்ணினேன் – அவருடைய தீவிர ரசிகையாக மாறிவிட்டேன்.! பிரபல நடிகை பேட்டி.!

vijay
vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய் இவர் சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் தான் மிகப்பெரிய ஒரு ஹீரோ என்ற அந்தஸ்தை வெளி கட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் சகஜமாக பழகுவதால் என்னவோ விஜயை எல்லோருக்குமே பிடிக்கிறது.

சினிமா உலகில் இருக்கும் பிரபலங்களுக்கு கூட விஜயை ரொம்ப பிடிக்கும் காரணம் எல்லோரிடமும் சகஜமாக பழகுவது அவர் வேலை உண்டு என்று இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது. ஒரு லெஜன்ட் இப்படி இருக்கிறாரா என்று ஆச்சரியப்பட்டு போய் தான் அவருக்கு ரசிகராக மாறிவிடுகின்றனர்.

அப்படிதான் மாஸ்டர் படத்தில் நடித்த ஒரு நடிகை அவருடைய எளிமை சிம்ப்ளிசிட்டி அடக்கம் எல்லாவற்றையும் பார்த்து விஜயின் ரசிகையாகவே மாறி உள்ளார் அந்த நடிகை யார் என்பது குறித்து தற்போது விலாவாரியாக பார்ப்போம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர்.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக இருந்ததால் படம் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கௌரி கிஷன், அர்ஜுன் தாஸ், பிரகிடா, சிபி, சதீஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடித்த ஆண்ட்ரியா சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது.

andrea-
andrea-

மாஸ்டர் படம் பண்றதுக்கு முன்னாடி விஜய் படங்களை நான் அந்த அளவுக்கு பெரிதாக பார்த்ததே கிடையாது. ஆனால் மாஸ்டர் படத்தில் விஜய் உடன் சேர்ந்து நடிக்கும் பொழுதே நான் அவருடைய ரசிகையாக மாறிவிட்டேன். அவருடன் நடிப்பது ரொம்ப ஈஸி.. அவர் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது ஒரு பெரிய ஸ்டாராக நடந்து கொள்ள மாட்டார். ரொம்ப நார்மலா இருப்பாரு.. மொத்தத்துல அவர் ஒரு நல்ல மனுஷன் என புகழ்ந்து பேசினார்.