தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் அண்மைகாலமாக வெளிவந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் 200 கோடிக்கு மேல் வசூலை அள்ளுகின்றன.
அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடித்த திரைப்படம் தான் பீஸ்ட் இது விஜய்க்கு 65வது திரைப்படமாக அமைந்தது ஆனால் முந்தைய படங்களைப் போல இந்தப் படம் இல்லாததால் கலவையான விமர்சனத்தை பெற்று சுமாரான வசூலை அள்ளியது.
அதை சரிக்கட்டும் வகையில் தனது 66வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி கொடுத்து. தற்போது நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது இந்த படத்தில் பல ஜாம்பவான்கள் நடிக்கின்றனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.
என்ற தகவல் கிடைத்துள்ளது இது இப்படியிருக்க விஜய் பற்றிய செய்திகள் அண்மை காலமாக சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது அப்படி அண்மையில் பேட்டி ஒன்றில் இயக்குனரும், நடிகருமான கே எஸ் ரவிகுமார் விஜய் குறித்து பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது. விஜய் வைராக்கிய குணம் கொண்டவர் அவர் ஒரு விஷயத்தை செய்து முடிக்கும் வரை விட்டுக்கொடுக்க மாட்டார்.
அவரை வைத்து இயக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் அவருடன் இணைந்து நடிக்க ஆசையாக இருக்கிறேன் என கே எஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இச்செய்தியை அறிந்த தளபதி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். நிச்சயம் நீங்கள் இருவரும் இணைந்தால் அந்த படம் ஹிட் அடிக்கும் எனவும் கூறி வருகின்றனர்.