உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 17 வருடங்கள் கழித்து மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி தற்போது ஹவுஸ் கபுள்ளாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் வேட்டையாடு விளையாடு படத்திற்கு ஸ்டண்ட் அமைத்த சிவா சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலிப் குமார் ரஜினி உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து ஜெயிலர் படத்தை எடுத்துள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகியுள்ளதால் ஸ்டண்ட் காட்சிகள் அதிகம் இருக்கும் என கூறப்பட்டது.
அதன்படி இந்த படத்தில் ஏழு ஸ்டன்ட் காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது படத்தில் ஒவ்வொரு ஸ்டாண்ட் காட்சியும் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் எனவும் கூறப்பட்ட வந்த நிலையில் . சமீபத்திய பேட்டி ஒன்றில் டெய்லர் பட ஸ்டண்ட் இயக்குனர் சிவா பேசியுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..
வேட்டையாடு விளையாடு படத்தை விட ஜெயிலர் படத்திற்கு அதிகமாக உழைத்து உள்ளதாக கூறியுள்ளார் மேலும் ஸ்டண்ட் கட்சிகள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் குறிப்பாக ஜெயிலர் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் வேற லெவலில் வந்திருப்பதாக கூறி உள்ளார். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர்.
ஏற்கனவே ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன் போன்ற பல சிறந்த நடிகர் நடித்துவரும் நிலையில் தற்போது இந்த தகவல் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்க செய்துள்ளதாக கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.