அஜித்தின் வாலி படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை ஜோதிகா இந்த படத்தை தொடர்ந்து குஷி, தெனாலி, உயிரிலே கலந்தது, முகவரி, காக்க காக்க, திருமலை, மன்மதன் என அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தி கொண்டார் ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் நடித்து அசத்தினார்.
இப்படி ஓடிக்கொண்டிருந்த ஜோதிகா ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சில வருடங்கள் சினிமா பக்கமே திரும்பாத ஜோதிகா 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே படத்தில் நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
இது ஒருபக்கம் இருக்க தனது படங்களையும் தாண்டி பிற நடிகரின் படங்கள் சிறப்பாக இருந்தால் அதை புகழ்ந்து , நடிகர் நடிகைகளை பற்றி புகழ்ந்து பேசுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் இந்த நிலையில் அஜித்தைப் பற்றி புகழ்ந்து பேசி உள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் நேர்கொண்ட பார்வை இந்த படத்தில் அஜித் நடித்தது குறித்து ஜோதிகா கூறியது என்னவென்றால்.. அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிப்பதற்காகவே அவருக்கு நன்றிகள் சொல்ல வேண்டும்.
ஒரு மாஸ் ஹீரோவாக மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது கமர்ஷியல் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கினும் என்று தான் மற்ற நடிகர்கள் யோசிப்பார்கள் ஆனால் அஜித் சமூக நலனில் அக்கறை கொண்டு இது மாதிரியான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதை நினைத்தேன் நான் ஒரு பெண்ணாக பெருமைப்படுகிறேன் என புகழ்ந்து பேசி உள்ளார் ஜோதிகா.