எனக்கு இந்த பழக்கம் இருக்கு.! உண்மையை ஒப்புக்கொண்ட காஜல் அகர்வால் ரசிகர்கள் ஷாக்.!

kajal-agarwal-tamil360newz
kajal-agarwal-tamil360newz

தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு கியான் ஹோ கயா நா… என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து அவர் தெலுங்குவில் சந்தமாமா, பவ்ருடு போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழில் 2008ஆம் ஆண்டு மரத் நடிப்பில் வெளிவந்த பழனி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

காஜல் அகர்வால் தமிழில் சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதன்மூலம் அவர் தமிழில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கினார் அந்த வகையில் விவேகம், மெர்சல், மாரி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டார்.தற்பொழுது அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி படத்தில் நடிப்பதற்காக, உதயநிதி ஸ்டாலினின் படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.

காஜல் அகர்வால்தமிழில் மூன்று படங்களும், தெலுங்கில் ஒரு சில படங்களும்  கைவசம் வைத்துள்ளதால் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.  அவர் கடைசியாக நடித்து முடித்துள்ள பாரிஸ் பாரிஸ் என்ற திரைப்படம் பணிகளும் முடிவடைந்து சென்சார் பிரச்சனை காரணமாக வெளிவரமால் உள்ளது இதில் அதிகமாக கவர்ச்சி இருப்பதால் அதனை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் பட்டுயுள்ளனர்.இந்த நிலையில் ஒரு உத்தரவு வந்ததால் அது வெளியாக நிலை தற்போது இருந்து வருகிறது.

இந்தநிலையில் காஜல் அகர்வால் தன்னுடைய சமூக வலைதளத்தில் கடந்த மூன்று நாட்களாக என் கைகள் பார்த்த அளவு ஆல்கஹாலை என்னுடைய லிவர் இந்த வாழ்நாளில் பார்த்தது கிடையாது என கூறியுள்ளார்.