திருட்டுத்தனமாக அந்த படம் பார்த்திருக்கிறேன்.. பேட்டியில் மொத்த உண்மையையும் சொன்ன விஜய் டிவி தொகுப்பாளனி

actress
actress

சின்னத்திரையில் இருப்பவர்கள் படிப்படியாக வளர்ந்து வெள்ளித்திரையில் வாய்ப்பை தட்டிப் பறிக்கின்றனர் அந்த வகையில் சிவகார்த்திகேயன், சந்தானம், பிரியா பவானி சங்கர், வாணி போஜன், திவ்யதர்ஷினி போன்றவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒன்னு, ரெண்டு திரைப்படங்களில் தலைகாட்டி பிரபலமடைந்தவர் விஜே ஜாக்லின்.

இவர் முதலில் கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு ஆண்டாள் அழகர் என தொடர்ந்து விஜய் டிவி தொலைக்காட்சியில் நடித்து வந்த இவர் திடீரென ரக்சன் உடன் கைகோர்த்து கலக்கப்போவது யாரு சீசன்  ஐந்து சீசன்களை இவர்கள் இருவரும் இணைந்து தொகுத்து வழங்கினார். இதன் மூலம் பெரிய அளவில் விஜே ஜாக்லின் பிரபலம் அடைந்தனர்.

அதன் பிறகு பட  வாய்ப்புகள் வெள்ளி திரையில் கிடைக்க ஆரம்பித்தது முதலில் லேடி சூப்பர் நயந்தாராவுடன் கைகோர்த்து “கோலமாவு கோகிலா” திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

தொடர்ந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில சில விஷயங்களை வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார் விஜே ஜாக்லின். அதில் அவர் சொன்னது.. நான் படிக்கும் பொழுது  18 + ஆங்கில படம் பார்த்து அம்மாவிடம் மாட்டியிருக்கிறேன் என்றும் ஆங்கில படத்தில் இருக்கும்..

அந்த மாதிரியான காட்சிகள் தான் பார்த்திருக்கிறேன் எனவும் குறிப்பிட்ட படங்களை நான் பார்ப்பதில்லை எனவும் கூறி இருக்கிறார். இதை கேட்ட ரசிகர்கள் உருட்டு உருட்டு உன் இஷ்டத்துக்கு உருட்டு என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.