தனுஷ் நடித்த அந்தப் படத்தை மட்டுமே 15 முறை பார்த்திருக்கிறேன் – பிரபல தயாரிப்பாளர் பேட்டி..!

dhanush
dhanush

90 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளவர் கலைப் புலி எஸ் தாணு. இவர் பெரிதும் முன்னணி நடிகரின் படங்களை தயாரித்து அசத்துவார் அந்த வகையில் நடிகர் தனுஷை வைத்து பல படங்களை தயாரித்து உள்ளார் குறிப்பாக கர்ணன், அசுரன் ஆகிய படங்களை..

தொடர்ந்து இவர் தயாரித்த திரைப்படம் நானே வருவேன். இந்த படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் வெளிவருவதற்கு முன்பாக இந்த படத்தை பிரமோஷன் செய்தது நடிகர் நடிகைகளை விட இந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு அவர்கள் தான். படம் சூப்பராக இருக்கிறது தனுஷ் கேரியரில் சிறந்த படம்..

நிச்சயம் ரசிகர்கள் தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளும் முதல் நாளே நானே வருவேன் திரைப்படம் 12 கோடி வரை வசூலிக்கும் என எல்லாம் இந்த படத்தை பற்றி புகழ்ந்து பேசி தள்ளினார். அவர் சொன்னது போலவே தற்பொழுது படம் வெளிவந்து வெற்றி நடை கண்டு ஓடுகிறது இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

அவருடன் கைகோர்த்து யோகி பாபு, இந்துஜா ரவிச்சந்திரன், எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பல முக்கிய நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். படம் தொடர்ந்து நல்ல விமர்சனத்தை பெற்று ஓடி கொண்டிருப்பதால் முதல் நாளில் நல்லதொரு வசூலை அள்ளும் என தெரிய வருகிறது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நானே வருவேன் திரைப்படம் குறித்து பேசிய செய்தி ஒன்றை இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

நானே வருவேன் திரைப்படம் முதல் நாளில் நல்ல வசூலை அள்ளிவிடும் இரண்டாவது நாள் பொன்னியின் செல்வன் படம் வெளியாகுவதால் வசூல் சிறிது குறையும் ஆனால் மூன்றாவது நாள் இரண்டும் ஒரே மாதிரியான நிலையை எட்டி விடும் இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரை நானே வருவேன் திரைப்படத்தை 15 முறை பார்த்திருக்கிறேன் எந்த படத்தையும் நான் இப்படி பார்த்தது இல்லை அப்போ அந்த கதாபாத்திரம் என்னை இழுக்கிறது என்று அர்த்தம் என்று தெரிவித்துள்ளார்.

thanu
thanu