வருட வருடம் எப்படி பல புதுமுக நடிகர் நடிகைகள் வருகின்றனரோ அதுபோல இளம் இயக்குனர்களும் கால்தடம் பாதிக்கின்றனர் அதிலும் குறிப்பாக சமீபகாலமாக மற்ற மொழி இயக்குனர்கள் தமிழில் கால் தடம் பதித்து சிறப்பான படங்களை கொடுக்க ஆசைப்படுகின்றனர் அந்தவகையில் மலையாளத்தில் ஒரு சில படங்களை இயக்கி வெற்றி கண்டவர் அல்போன்ஸ் புத்திரன்.
முதலில் இவர் நேரம் என்னும் திரைப்படத்தை இருந்தார் இந்த படம் மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியானது இதுவே அவரது முதல் படமாக அமைந்தது அதனை தொடர்ந்து மீண்டும் நடிகர் நிவின் பாலியை வைத்து எடுத்த திரைப்படம் தான் பிரேமம். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதல், சென்டிமென்ட் திரைப்படமாக உருவாகி இருந்தது.
இந்த படத்தில் மூன்று ஹீரோயின்களை காதலிக்கும் களத்தில் ஹீரோ நிவின் பாலி நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்க்காத ஒரு பிரம்மாண்ட வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று தந்தது இந்த திரைப்படம் சுமார் 200 நாட்களை கடந்து ஓடிய தாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடித்த இந்த நடிகர், நடிகைகள் பேமஸ் ஆயினர் அதேபோல அல்போன்ஸ் புத்திரனும் பின் டாப் ஹீரோ ஹீரோக்களை வைத்து படம் பண்ணும் அளவிற்கு உயர்ந்தார்.
இப்பொழுது கூட அல்போன்ஸ் புத்திரன் நயன்தாரா, பிரித்திவிராஜ் ஆகியோர்களை வைத்து கோல்ட் என்னும் திரைப்படத்தை எடுத்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் விஜயின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள ஜாலியோ ஜிம்கானா பாடலை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஷேர் செய்து உள்ளார்.
இதனையடுத்து ரசிகர் ஒருவர் அல்போன்ஸ் புத்திரன் பல்வேறு விதமான கேள்விகள் கேட்டார் அப்போது ஒரு கேள்விக்கு பதிலளித்தார். பிரேமம் படம் வெளியான பிறகு முதலில் தமிழ்நாட்டில் இருந்து போனில் அழைத்த நபர் விஜய் தான். நான் விஜய் சாரை ஒரு முறை சந்தித்து உள்ளே ஒரு நாள் அவர் என்னை படம் பண்ணப் அழைப்பார் என நம்பி கொண்டு இருக்கிறேன் காத்திருக்கிறேன் பதிவிட்டார்.