நடிகர் சிம்பு திடீரென உடல் எடையை குறைத்து தற்போது தொடர்ந்து சிறப்பம்சம் உள்ள திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அவருக்கு மார்க்கெட் தற்போது எகிரி உள்ளது மேலும் தன்னை முற்றிலுமாக மாற்றியும் கொண்டுள்ளார் .
நடிகர் புதிய சிம்பு அவதாரம் எடுத்துள்ளது சினிமா துறையினரையும் மற்றும் அவரது ரசிகர்களையும் துள்ளல் ஆட்டம் போட வைத்துள்ளது. ஈஸ்வரன் படத்தை முடித்த கையோடு அஜித்தை வைத்து மங்காத்தா என்ற வெற்றிப்படத்தை கொடுத்த வெங்கட் பிரபுவுடன் இணைந்து மாநாடு என்ற திரைப்படத்தில் சிம்பு நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது படக்குழுவினருடன் ட்விட்டர் பக்கத்தில் கலந்துகொண்டார் அப்பொழுது பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசிக் கொண்டிருந்த சிம்பு திடீரென தன்னைப் பற்றியும் பேசி உள்ளார் அப்போது அவர் கூறியது.
நான் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருகிறேன் ஆனால் கடந்த ஓர் ஆண்டாக தனி நான் முற்றிலுமாக மாற்றிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் குடிப்பழக்கத்தை விட்டு உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார் அதுவும் மாநாடு திரைப்படத்தில் பிரேம்ஜி போன்றவர்கள் மத்தியில் குடிக்காமல் இருப்பதே மிகப் பெரிய விஷயம் என நகைச்சுவையாக கூறினார்.
இச்செய்தி தற்பொழுதுசினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் வேகம் எடுத்துள்ளது.