எனக்கு மொழி பிரச்சனை கிடையாது நான் எதிர்பார்க்கும் அந்தப் படங்கள் கிடைத்தால் நடிப்பேன் – நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்.

saipallavi-
saipallavi-

நடிகை சாய் பல்லவி தமிழ் சினிமா உலகில் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் மலையாள சினிமா தான் இவருக்கு பேரையும் புகழையும் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து இவருக்கு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

நடிகை சாய் பல்லவி படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை கொடுத்து வருவதால் தொடர்ந்து வெற்றியை பெற்று வருகிறார். தமிழில் நடிகை சாய் பல்லவி மாரி 2,என் ஜி கே ஆகிய திரைப்படங்கள் நல்லதொரு வெற்றியை பெற்றது அதனை தொடர்ந்து இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைத்ததோ இல்லையோ தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருப்பதால் அங்கேயே நடித்து வருகிறார்.

சினிமாவில் ஒரு பக்கம் சிறப்பாக நடிக்க மறுபக்கம் தனது அழகை காட்டியபடி போட்டோஷூட் நடத்தி வருகிறார். மற்ற நடிகைகள் போல் பெரிதளவு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு கிளாமர் காட்டாமல் கொஞ்சம் கொஞ்சமாக தனது அழகை காட்டி வருகிறார் சாய் பல்லவி.

கடைசியாக நானி நடிப்பில் வெளியான ஷியாம் சின்கா ராய் படத்தில் இவரது நடிப்பு ரசிக்கும்படி  இருந்தது குறிப்பிடதக்கது அந்த படம் இப்போ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது நல்ல கதை  இருந்தால் போதும் அதில் நடிக்க விருப்பம் தமிழ்-தெலுங்கு என எந்த மொழி திரைப்படங்களாக இருந்தாலும் பிரச்சனை இல்லை  எனக்கு கதாபாத்திரம் முக்கியம் கொடுக்கும் திரைப்படங்களில் நடிப்பேன் என பேட்டி அளித்தார்.