என்னுடைய வாழ்நாளில் இப்படி ஒரு படத்தை எடுத்தது கிடையாது – நான்கு படத்திற்கு சமம்.! இயக்குனர் லோகேஷ் வெளிப்படை.

lokesh
lokesh

சினிமா உலகம் புதியதை நோக்கி நகருகிறது அதற்கு ஏற்றார் போல இயக்குனர்களும், நடிகர்களும் அப்டேட்டாக இருந்து கொண்டு சிறப்பான படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்கின்றனர். அந்த வகையில் இயக்குனர்  லோகேஷ் கனகராஜ் சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். முதலில் மாநகரம் என்ற படத்தை கொடுத்ததைத் தொடர்ந்து அதன்பின் இவர் டாப் நடிகர்களுக்கு கதை சொல்லும்.

அளவிற்கு இவரது மார்க்கெட் உயர்ந்தது அந்த வகையில் அடுத்ததாக கார்த்தியுடன் கைகோர்த்த கைதி எனும் திரைப்படத்தை கொடுத்திருந்தார் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் என இருந்தது சொல்லப்போனால் இந்த படத்தில் ஒரு பாடல் கூட இல்லை என்பது தான் உண்மை இந்த படம் அதிரிபுதிரி ஹிட் அடிக்க..

அடுத்ததாக டாப் நடிகரான விஜயுடன் கைகோர்த்து மாஸ்டர் என்னும் திரைப்படத்தை எடுத்தார். இந்த படம் வெளிவந்து 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது இப்போது ஒருவழியாக அவரது ஆசை நாயகன் கமலுடன் கைகோர்த்து விக்ரம் என்ற படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தின் சூட்டிங் வெகுவிரைவிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் ஒரு உண்மையை மட்டும் இப்பொழுது கூறியுள்ளார்.

அதில் அவர் சொல்லியது நட்சத்திர பட்டாளங்கள் நிறைய பேர் இருப்பதால் விக்ரம் திரைப்படம் வேற லெவல் எடுக்கப்பட்டு வருகிறது விக்ரம் படம் 4 படத்திற்கான வேலையை ஒன்றாக செய்துள்ளோம் என கூறி உள்ளார். அப்படி பார்க்கையில் இந்த படம் வேற லெவல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.