அஜித்தை போன்று ஒரு வலிமையான நபரை நான் இதுவரை பார்த்ததே இல்லை – கே. எஸ். ரவிக்குமார் பாராட்டு.!

ajith
ajith

நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதே படகுழுவுடன் இணைந்து தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் சூட்டிங் முழுவதும் ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. ஏகே 61 திரைப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அண்மையில் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

AK 61 வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருப்பதாக படக்குழு சொல்லி உள்ளது. இந்த படத்தில் யார்  வில்லன் ஹீரோயின் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன அந்த வகையில் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார் என்றும்,  வில்லனாக சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து அசத்திய john kokken.

மேலும் நடுநிசி நாய்கள் படத்தில் வில்லனாக மிரட்டிய வீரா இந்த படத்தில் அஜித்திற்கு இரண்டாவது வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் சமுத்திரகனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன இது ஒரு பக்கமிருக்க அஜித் முந்தைய படங்களை இயக்கிய வெற்றிகண்ட கே எஸ் ரவிக்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசியுள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது.

அஜித் மனதில் பட்டதை முகத்துக்கு நேராக பேசக்கூடியவர் இது சரி என்றால் சரி அல்லது தவறு என்றால் உடனே கூறி விடுவாராம் மேலும் அஜித் வெளி உலகத்திற்கு தெரியாமல் பல உதவிகளை செய்து வருவதாக கே எஸ் ரவிக்குமார் தெரிவித்தார் மேலும் கடின உழைப்பு என்றால் அதுதான் என்னை போன்றவர்களிடம் அஜித்திடமிருந்து கடின உழைப்பை கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார் அதாவது வரலாறு படத்தின் ஷூட்டிங்கின்போது 15 நாள் கே எஸ் ரவிக்குமார் அஜீத்திடம் கால்ஷீட் கேட்டார்.

ஆனால் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்ததால் ஏழு நாட்களில் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என சொல்லி உள்ளார் இதனையடுத்து படத்தின் ஷூட்டிங் இரவு பகல் பார்க்காமல் நடைபெற்றது அஜித்தும் எந்த தயக்கமும் காட்டாமல் ஏழு நாட்கள் இரவு பகலாக நடித்து அசத்தியதாகக் கூறினார். அஜித் அன்று நினைத்தால் தான் 7நாட்களில் எடுக்க முடிந்தது ரஞ்சித் அஜித் வலிமையானவர் என கூறினார்.