90 காலகட்டங்களில் வெற்றியை மட்டுமே சம்பாரித்த நடிகரின் யுத்தியை.. இப்போ பின்பற்றும் நடிகர் விஜய் சேதுபதி.!

vijay-sethupathy-
vijay-sethupathy-

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முதலில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் பின் தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து படிப்படியாக ஹீரோ, வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் தொடர்ந்து வெற்றி கண்டதால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக விஸ்வரூபம் எடுத்து உள்ளார் மேலும் தனது திறமைக்கு ஏற்றவாறு சம்பளத்தையும் அதிகப்படியாக உயர்த்தி நடிக்கிறார்.

தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் நடிகர் விஜய் சேதுபதிக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் சுமாரான வெற்றியையே பெற்றன இதனால் இப்போது விஜய் சேதுபதி காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் சேதுபதி குறித்து ஒரு தகவல் ஒன்று சூப்பராக கசிந்துள்ளது அதாவது விஜய் சேதுபதிக்கு எந்த ஒரு இயக்குனர் வந்து கால்ஷீட் கேட்டாலும் எப்ப வேண்டுமானாலும் பாத்துக்கலாம் என கூறி உடனே ஓகே சொல்லிவிட்டாராம் மற்ற நடிகர்கள் கதை பிடித்திருந்தால் மட்டுமே படத்தில் நடிப்பது வழக்கம் ஆனால் விஜய் சேதுபதியை இதிலிருந்து மாறுபட்டு இயக்குனரை விட்டுவிடக்கூடாது என்பதற்காக முதலில் ஓகே செய்து பின் பார்த்துக்கொள்ளலாம் என கூறி விடுவாராம்.

சொல்லப்போனால் இந்த யுத்தியை பல வருடங்களுக்கு முன்பே செய்து காட்டி உள்ளவர்தான் நடிகர் ராமராஜன் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்ந்து இருந்தார் அப்போது அவர் கரகாட்டக்காரன், நம்ம ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது இப்படி இருந்தாலும் அப்போது இயக்குனர்கள் கதை வந்து கூறினால் முதலில் அவரிடம் ஓகே சொல்லி கால்சீட் கொடுத்து விடுவாராம்.

பின் அடுத்தடுத்த இயக்குனர்கள் வந்தாலும் கதையை கேட்ட ஓகே செய்து விடுவாராம் அதனால் 1988 மட்டும் 8 படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் நல்ல மார்க்கெட்டில் இருக்கும் போது நிறைய கதை வரும் அதை விட்டு விடக்கூடாது என பணத்தை சம்பாதிக்க இப்படி யுத்தியை செய்தாராம் அதையே தற்பொழுது நடிகர் விஜய் சேதுபதியும் செய்வதாக கூறப்படுகிறது.