சமீபகாலமாக நடிகைகள் கூட அதிக பட வாய்ப்புகள் பெற்றார்கள் என்றால் அது கேள்விக்குறிதான் வளர்ந்து வரும் நடிகைகள் தான் தற்போது வருடத்திற்கு ஏழு எட்டுப் படங்களை அள்ளி அசத்துகின்றனர். அந்த வகையில் சின்னத்திரையிலிருந்து தாவிய பிரியா பவானி சங்கர் சைலண்டாக இருந்துகொண்டு..
தற்போது வருடத்திற்கு ஏழு எட்டு படங்களில் நடித்து அசத்துகிறார். இந்த வருடத்தில் மட்டுமே அவரது கையில் சுமார் 9 படங்கள் இருந்தன இதுதவிர பல்வேறு படங்களில் நடிக்க பேச்சு வார்த்தையும் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. நடிகை பிரியா பவானி சங்கர் ஆள் பார்ப்பதற்கு செம சூப்பராக கொழுக் மொழுக்கென்று இருக்கிறார்.
அதோடு மட்டுமல்லாமல் கொடுக்கின்ற சம்பளத்தை வாங்கி கொண்டு நடிப்பதால் தற்போது இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவரை தொடர்ந்து நாடி வருகின்றனர். ஆனால் நாளுக்கு நாள் நடிகை பிரியா பவானி சங்கரின் சினிமா பயணம் உயர்ந்துகொண்டே இருக்கிறது.
சினிமாவில் வெற்றி கொடியை நாடினாலும் ரசிகர்கள் தான் தன்னை அடுத்த லெவலுக்கு நடத்திச் செல்வார்கள் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு அவர்களின் மனதை கவரும் படியான போட்டோ ஷூட் நடத்தி அசத்தி வருகிறார் அந்த புகைப் படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் பிரிய பவனி சங்கர் பேட்டி ஒன்றில் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் சொன்னது : நான் வாழ்க்கையில் தவறான ஒரு ஆளை தேர்வு செய்துவிட்டேன். அதனால் மிகவும் கஷ்டப்பட்டேன் என புலம்பித் தீர்த்தார் இதை அறிந்த ரசிகர்கள் நிச்சயமாக அது பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தான் என அடித்துக் கூறி வருகின்றனர்.