நடிகை சினேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் தனுஷ், விஜய், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இந்த நிலையில் ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு குறைந்ததால் நடிகர் பிரசன்னாவை காதலித்து வந்தார். பிருகு அவரையே திருமணம் செய்து கொண்டார் இந்த நிலையில் இந்த தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்கள் திருமணம் 2012 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது அதேபோல் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள் பிரசன்னா மற்றும் சினேகா தங்களுடைய வாழ்க்கையில் எந்த ஒரு நல்ல நிகழ்ச்சி நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதனை சமூக வலைதளமான ட்விட்டரில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
அந்தவகையில் சினேகா மற்றும் பிரசன்னா அவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிவிட்டது இந்த நிலையில் சினேகா தன்னுடைய கணவர் பிரசன்னாவுக்கு ரொமான்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் சினேகா அவர்கள் இது எங்களுக்கு பத்தாவது திருமண ஆண்டு எங்களது இந்த பத்து ஆண்டு பயணம் அவ்வளவு எளிதாக இல்லை. பல சண்டைகள் பல மனவருத்தங்கள் கருத்து வேறுபாடுகள் என பலவற்றை கடந்து வந்துள்ளோம்.
அதுமட்டுமில்லாமல் நான் கொடுத்த வாக்குறுதிகளை மீறி விட்டேன் சில சமயம் உங்களுடைய இதயத்தையும் உடைத்து விட்டேன் என மிகவும் ரொமான்ஸாக சினேகா பதிவிட்டு உள்ளது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.