சினிமா உலகில் திறமை இருப்பவர்கள் அழகாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை அதை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் நடிகர் பிரபுதேவா சொல்லிக்கொள்ளும்படி பெரிய அளவில் வாட்டசாட்டமாகவும், அழகான மனிதர் கிடையாது ஆனால் தனது உடலுக்கு ஏற்றவாறு தனது திறமையைக் காட்டி அசத்தினார்.
முதலில் நடன இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி. பின் தனது நடிப்பு திறமையின் மூலம் தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் ஒரு கட்டத்தில் ஹிந்தி பக்கமும் சென்று ஹீரோவாக நடிப்பதற்கு பதிலாக இவர் இயக்குனர் வேலை பார்க்க ஆரம்பித்தார்.
அதேசமயம் தமிழிலும் இவர் தளபதி விஜயை வைத்து வில்லு, போக்கிரி போன்ற சிறப்பான படங்களை இயக்கி வெற்றி கண்டார். இவ்வுலகில் எதிலெல்லாம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியுமோ அதையெல்லாம் ஈடுபடுத்தி வெற்றி கண்டார் இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் குடும்ப விஷயத்தில் மட்டும் சில சிக்கல்களை சந்தித்தார் பிரபுதேவா.
தன் மனைவியுடன் இவரது வாழ்க்கையை நீண்ட வருடங்கள் நீடித்தாலும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர் அதன்பின் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான நடிகை நயன்தாராவுடன் காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொள்ள முனைப்பு காட்டினார்.
ஆனால் சில பிரச்சனைகள் அதிலிருந்து விலகி இப்பொழுது டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக பிரபுதேவாவின் சகோதரர் உறுதிப்படுத்தினார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை மஞ்சு வாரியர் நான் பிரபுதேவாவை ரொம்ப வருடங்களாக காதலித்து வருகிறேன் என இந்த பதிவை போட்டு பலருக்கும் ஆச்சரியம் கொடுத்துள்ளார்.