தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் நாயகன் இத்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையில் அறிமுகமானவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடன் நடித்த நடிகர் பொன்வண்ணன் காதலித்து திருமணம் செய்துகொண்டார் அந்தவகையில் இவர் திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் தையல் பயிற்சியும் சொல்லிக் கொடுத்து வருகிறார்.
பொதுவாக தமிழ் சினிமாவில் அம்மா ரோலில் நடிகை சரண்யாவை அடித்துக்கொள்ள முடியாது ஏனெனில் இவருடைய ரியாக்ஷன் மற்றும் நடிப்பு மிகவும் பிரம்மாண்டமாக இருப்பது மட்டுமல்லாமல் ரியாலிட்டி ஆக இருக்கும் அந்த வகையில் இவர் கதாநாயகியாக நடிக்கும் போது கூட இவரை ரசிக்காத ரசிகர்கள் தற்போது அம்மாவாக நடித்த பிறகு பலரும் இவரை பின் தொடர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித் ,விஜய் சேதுபதி, தனுஷ் என பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் விஜய்க்கு மட்டும் இதுவரை அம்மாவாக நடிக்க வில்லை.
அந்தவகையில் தளபதியுடன் சிவகாசி மற்றும் குருவி திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் ஆனால் இவர் அந்த திரைப்படங்களில் விஜய்க்கு அண்ணியாக தான் நடித்துள்ளாராம் இதுவரை அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கவில்லையாம்.
ஆகையால் தளபதி விஜய்க்கு அம்மாவாக நடிக்க சரண்யாவிற்கு ஆசையாம் இந்த ஆசை விரைவில் நிறைவேறும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம். கண்டிப்பாக இவர் விஜய் திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தால் அத்திரைப்படம் மாபெரும் ஹிட்டு கொடுக்கும் என்பது தெரிந்த விஷயம் தான்.