தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் மற்ற நாடுகளிலும் ரசிகர் பட்டாளத்தை அதிகம் சேர்த்து வைத்திருப்பவர் தான் இளைய தளபதி விஜய் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமசன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று அதிக நாட்கள் ஒளிபரப்பாகி வந்தது ஏன் சமீபத்தில் கூட சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி விட்டது.
இதனையடுத்து தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தில் படு பிசியாக நடித்து வருகிறாராம் இந்த திரைப்படத்திற்காக இளைய தளபதி விஜய் ஜார்ஜியா நாட்டிற்கு சென்றுள்ளார் நெல்சனுடன் கைகோர்க்கும் விஜய் தனது 65வது திரைப்படத்தை தயாரிப்பதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உள்ளார்.
இந்நிலையில் விஜயை வைத்து எப்படியாவது திரைப்படம் தயாரிக்க வேண்டும் என பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகிறார்கள்.அந்த வகையில் விஜயை வைத்து திரைப்படத்தை தயாரித்து விடலாம் என காத்துக் கொண்டிருக்கும் இயக்குனர்களில் கேஎஸ் ரவிக்குமாரும் வலம் வருகிறாராம்.
ஆம் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கேஎஸ் ரவிக்குமார் தளபதி மட்டும் ஓகே சொன்னால் போதும் நான் படையப்பா திரைப்படம் எப்படி ஹிட்டானது அதோடு சூப்பர் ஹிட் கொடுக்கும் நான் இயக்கப்போகும் திரைப்படம் என கூறியது மட்டுமல்லாமல் தளபதி தலையாட்டினாள் போதும் நாளைக்கே படப்பிடிப்பு தொடங்கும் ஏனென்றால் அப்படி ஒரு கதை நான் தளபதிக்காக வைத்திருக்கிறேன் என கூறியுள்ளாராம்.
அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் தளபதி திரைப்படத்திற்கு சூப்பர் கதையாக இருந்தால் நல்லா இருக்கும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.