தரமான கதை சூர்யாவுக்காக வைத்திருக்கிறேன் ஆனால் எனக்கு வாய்ப்பு தருவாரா இயக்குனர் ஆதங்கம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்து தமிழ் சினிமா உலகில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அந்தவகையில் விஜய்,அஜித் போன்றவர்களை ஓவர்டேக் செய்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அளவிற்கு சினிமாவில் வளர்ந்து இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் யார் சூனியம் வைத்தார்கள் என்று தெரியவில்லை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியடைந்தது.

அந்தவகையில் என்ஜிகே மற்றும் தானா சேர்ந்த கூட்டம்  உள்ளிட்ட  படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு சரியாக தெரியவில்லை என்று சூர்யாவிடம் கூற அதற்கு சூர்யா இதற்கு மேல் நடிக்க கற்றுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி சங்கடமான சூழ்நிலையில் சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சூரரைப்போற்று.

இத்திரைப்படம் சில வருடங்களுக்குப் பிறகு சூர்யாவிற்கு ரீ எண்ட்ரி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து சூர்யா இயக்குனர் ஞானவேல் உருவாக்கிவரும் திரைப்படம் ஒன்றில்  நீண்ட கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் வக்கீல்  கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இளம் இயக்குனர் ஒருவர் சூர்யாவின் தனது படத்தில் நடிக்க வைக்க ஆசைப்படுவதாகவும் சூர்யாவிற்கு ஏற்றார் போல் முரட்டுத்தனமான கதை என்னிடம் உள்ளது என்றும் ரசிகர்களிடம் கூறியுள்ளார். அதற்கு ரசிகர்கள் படம் எடுக்கலாமே என்று கூறியதற்கு சூர்யாவும் எனது படத்திலெல்லாம் நடிப்பாரா என்று பதில் அளித்துள்ளார்.

அது வேறு யாருமில்லை காவல்துறை உங்கள் நண்பன் திரைப்படத்தை இயக்கிய இளம் இயக்குனர் ஆர்பிஎம் சூர்யாவிற்கு ஏற்றது போல தரமான கதை உள்ளதாகவும் இத்திரைப்படத்தில் அவர் நடித்தால் மாஸாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் சூர்யாவிடம் இந்த கதையை கூறிய சூர்யாவிற்கு பிடித்து இருந்தால் கண்டிப்பாக அவரே சொந்தமாக தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது