விஜய் மீது crush தான்.. அதுக்கு இப்படியா.? ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதியை விடாமல் துரத்தும் ராஷ்மிகா மந்தனா.! இது எங்க போய் முடியுமோ..

vijay
vijay

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருப்பவர் தளபதி விஜய். இவர் தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தந்து 66-வது திரைப்படமான வாரிசு  படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜ் தயாரித்தார்.

வாரிசு திரைப்படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் கதையாக உருவாகினாலும்.. அதேசமயம் இந்த படத்தில் ஆக்சன், காமெடி, காதல் என அனைத்தும் இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் மற்றும் அந்த படத்தில் நடித்து வரும் முன்னணி நடிகர் சரத்குமார் சமீபத்திய பேட்டிகளில் சொன்னார்கள். இந்த படத்தின் மூன்று கட்ட சூட்டிங் வெற்றிகரமாக..

முடிந்த நிலையில் அடுத்ததாக சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு தற்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், மனோபாலா, யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது இந்த படத்தை பெரிய அளவில் மக்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அண்மையில் விஜய் வாரிசு படப்பிடிப்பு  தளத்தில் ரசிகர்களை சந்தித்தார் அது பெரிய அளவில் வைரலானது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ராஷ்மிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொல்லியுள்ளது என்னவென்றால்..

விஜய் தான் தனது கிரஷ்  என்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை எப்பொழுது பார்த்தாலும் சுற்றிப் போடுவது போன்ற பழக்கத்தை தொடர்ந்து வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் விஜய் அப்படி ராஷ்மிகா செய்ததால் கையெடுத்து கும்பிட்டு வேண்டாம் என சொல்லி சென்று விடுவாராம் இதனையும் நடிகை ராஷ்மிகா மந்தனா அந்த பேட்டியில் வெளிப்படையாக சொல்லியுள்ளார்.