ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மனைவிக்கு இருந்த ஆலோபீசியா என்ற நோய் பிரபல தமிழ் நடிகைக்கு இருந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது, இதனை அவரே அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவில் இருக்கும் கலைஞர்களை ஊக்குவிக்குவதற்காகவும் அவர்களை உற்சாக படுத்துவதற்காகவும் ஆஸ்கார் விழா நடைபெறுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த நிலையில் சமீபத்தில் ஆஸ்கார் விழா நடைபெற்றது இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வில் ஸ்மித் வாங்கினார்.
இந்த விருது வழங்கும் விழாவில் ஒரு அசம்பாவிதம் நடந்தது அதாவது தொகுப்பாளர் கிரிஸ் ராக் என்பவர் வில் ஸ்மித் மனைவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதால் ஆத்திரமடைந்த அதனால் ஓங்கி அவருடைய கன்னத்தில் அறைந்தார். வில் ஸ்மித் மனைவிக்கு அலோபீசியா என்ற நோய் இருந்தால் தலை முடி கொட்டிப் போய் மொட்டையாக இருந்ததை கிரிஸ் ராக் கிண்டல் செய்திருந்தார் அதனால்தான் ஆத்திரமடைந்து கன்னத்தில் அறைந்தார் வில் ஸ்மித்.
இந்த நிலையில் தற்பொழுது பிரபல தமிழ் நடிகையான வாரணம் ஆயிரம் படத்தில் நடித்த சமீரா ரெட்டி தனக்கும் இந்த பிரச்சனை இருந்ததாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார், அஜித்தின் அசல் திரைப்படத்திலும் மாதவன் நடித்த வேட்டை, சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி.
இவருக்கு அலோபிசியா நோய் தனக்கும் இருந்ததாகவும் அதனால் சில ஆண்டுகள் மிகவும் கஷ்டப்பட்ட தாகவும் தனக்கு இருக்கும் முடி கொட்டிய தாகவும் பிறகு சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு சரியாகி விட்டதாகவும் கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் மீண்டும் தனக்கு அந்த நோய் வர வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.
தற்பொழுது நீண்ட முடி காணப்பட்டாலும் இந்த நோய்த்தாக்கம் மீண்டும் வந்தால் முடி கொட்டும் எனவும் அறிவித்துள்ளார் இவர் கூறியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.