இயக்குனர் பாலா தற்பொழுது தன்னுடைய வனங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகி விட்டதாக அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இதனால் சூர்யாவின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகிய ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் சூர்யாவின் நடிப்பில் வெளியாகிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பு பெற்றது இந்த நிலையில் இயக்குனர் பாண்டியராஜ் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்கள் அந்த வகையில் சூர்யா மற்றும் பாலா கூட்டணியில் உருவாகி வந்த திரைப்படம் தான் வணங்கான் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம்தான் தயாரித்து வந்தது. ஏற்கனவே பாலா இயக்கத்தில் சூர்யா அவர்கள் நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் அது சூரியாவின் வாழ்வில் மிக முக்கிய திரைப்படமாகவும் அமைந்தது.
பின்பு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சூர்யா பாலா இணைந்த பணியாற்றியது கிடையாது அதனால் மீண்டும் எப்பொழுது இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் அந்த வகையில் பாலாவின் இயக்கத்தில் வனங்கான் திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்இசையமைக்க இருந்தார். சூர்யாவின் 41வது திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது.
மதுரையில் மிக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு துவங்கப்பட இறந்தது இந்த திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, மமிதா பைஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த நிலையில் படப்பிடிப்பில் சூர்யாவிற்கும் பாலாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதில் சூர்யா கோபத்துடன் படப்பிடிப்பை விட்டு வெளியேறுவதாக தகவல் வெளியானது. அப்படி இருக்கும் நிலையில் திடீரென பாலா தன்னுடைய படத்திலிருந்து சூர்யா விலகி விட்டார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன் ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால் இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்ற ஐயம் தற்பொழுது எனக்கு ஏற்பட்டுள்ளது.
என் மீது இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தரும சங்கடம் கூட நேர்ந்து விடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.
எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒரு மனதாக முடிவு எடுத்திருக்கிறோம் அதில் அவருக்கும் மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலம் கருதி எடுத்த முடிவு இது. நந்தாவில் நான் பார்த்த சூர்யா பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் மறுபடி வணங்கான் பட பணிகள் தொடரும் என தனது அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.